Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொட்டத்தனமாக செயல்படுகிறார் டிடிவி தினகரன்: தங்க தமிழ்ச்செல்வன் ஆவேசம்

Webdunia
திங்கள், 24 ஜூன் 2019 (19:51 IST)
டிடிவி தினகரன் பொட்டத்தனமாக செயல்படுவதாகவும் இப்படியே போனால் அவர் அழிந்து போய்விடுவார் என்றும் தங்க தமிழ்ச்செல்வன் பேசிய ஆடியோ ஒன்று முன்னணி ஊடகம் ஒன்றின் டுவிட்டர் பக்கத்தில் வெளிவந்து வைரலாகியுள்ளது.
 
 
டிடிவி தினகரனுக்கும் தங்க தமிழ்ச்செல்வனுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டிருப்பதாகவும், இதனால் கூடிய விரைவில் தங்க தமிழ்ச்செல்வன், அதிமுகவில் இணையவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது
 
 
இந்த நிலையில் டிடிவி தினகரனின் உதவியாளரிடம் தங்க தமிழ்ச்செல்வன் பேசிய ஆடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகியுள்ளது. அதில் தங்க தமிழ்ச்செல்வன், 'இப்படியே பொட்டத்தனமாக செயல்பட்டு கொண்டிருந்தால் ஜென்மத்திலும் உங்களால் ஜெயிக்க முடியாது. நீங்கள் அழிந்து போய்விடுவீர்கள். நாளைக்கே என்னால் மதுரையில் கூட்டம் போட்டு என் செல்வாக்கை நிரூபிக்க முடியும். இந்த மாதிரி பேடித்தனமாக அரசியல் செய்தால் ஜென்மத்திற்கும் அவர் ஜெயிக்க மாட்டார்' என தங்க தமிழ்ச்செல்வன் ஆவேசமாக கூறியுள்ளது அந்த வீடியோவில் உள்ளது
 
இந்த வீடியோ உண்மையானதா? அப்படியே உண்மையாக இருந்தால் அதற்கு டிடிவி தினகரனின் பதில் என்ன? என்பது குறித்து விரைவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments