திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து அணைகளும் நிரம்பியுள்ளதோடு சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் ஏரி, குளங்களும் நிரம்பியுள்ளன.
வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. வங்க கடலில் முன்னதாக சில காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவானாலும் அவை புயலாக வலுவடையாமலே கலைந்தன. எனினும் தொடர்ந்து உருவான காற்றழுத்த தாழ்வு பகுதிகளால் பல இடங்களில் நல்ல மழை பெய்தது.
அதனபடி திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தின் அனைத்து அணைகளும் நிரம்பியுள்ளதோடு சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் ஏரி, குளங்களும் நிரம்பியுள்ளன. குறிப்பாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இந்த வெள்ள நீர் ஆற்றில் உள்ள கல் மண்டபங்கள், நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை முருகன் கோவில் உள்ளிட்ட பகுதிகளை சூழ்ந்து செல்கிறது. வெள்ளப்பெருக்கு காரணமாக தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ, கரை பகுதிக்குச் சென்று பார்வையிடவும் செல்பி எடுக்கவும் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.