Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தம்பிதுரை ஆய்வு என்பது வெறும் பெயரளவிற்கே

Advertiesment
தம்பிதுரை ஆய்வு என்பது வெறும் பெயரளவிற்கே
, வெள்ளி, 14 செப்டம்பர் 2018 (18:49 IST)
மக்களவை துணை சபாநாயகர் ஆய்வு என்பது வெறும் பெயரளவிற்கே. இத்தனை நாளாக இல்லாமல், தற்போது தேர்தல் வருவதினால் தான் வருவதாகவும் பல ஆண்டுகளாக மனுக்கள் கொடுத்தும் எந்த வித பயனுமில்லை என்று கரூர் பொதுமக்கள் சரமாரியாக குற்றச்சாட்டினர்


கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல பகுதிகளில் பல்வேறு பிரச்சினைகள் நிலவி வந்த நிலையில்., அந்த தொகுதியின் அ.தி.மு.க எம்.எல்.ஏ வும்,. தற்போதைய தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ வும், முன்னாள் அமைச்சருமான வி.செந்தில் பாலாஜி, நீக்கப்பட்டதிலிருந்து அந்த தொகுதியை யாரும் கண்டு கொள்ளவில்லை, என்றும் வரும் 20 ம் தேதி அரசினை கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் கண்டன உண்ணாவிரதம் நடைபெறுவதாக முன்னாள் அமைச்சரும், அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் கழக அமைப்பு செயலாளருமான வி.செந்தில் பாலாஜி, அறிவித்ததையடுத்து, அ.தி.மு.க கொள்கை பரப்பு செயலாளரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பித்துரை  கடந்த12ம் தேதி மாலை முதல்  நேற்று காலை முதல் மாலை வரை அனல்பறக்கும் பொதுமக்களின் குறைகளை கேட்டு வருகின்றார்.
webdunia


நேற்று முழுவதும் அரவக்குறிச்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல பகுதிகளில் பொதுமக்களின் குறைகளை கேட்ட நிலையில், இன்று பள்ளப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது ஒரு சில இடங்களில் பொதுமக்கள் தற்போது மட்டும் வந்துள்ளீர்கள் என்றும், நீங்கள் (தம்பித்துரை) எங்களது எம்.பி என்றும், இரண்டு முறை இதே கரூர் பாராளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில்,. அ.தி.மு.க அரசினை எதிர்த்து இந்த தொகுதியின் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி, உண்ணாவிரதம் அறிவித்த நிலையில் தான் வந்துள்ளீர்கள் என்றும், மேலும் பல ஆண்டுகளாக எங்களது குறைகளை தீர்க்க வில்லை என்றும், மின்சார வசதி, நல்ல தார்சாலை, குடிநீர் வசதி என்று எதுவும் இல்லை என்று சரமாரியாக குற்றம் சாட்டினார்கள்.

இந்த சம்பவத்தினையடுத்து கண்ணீர் மல்க பேசிய பொதுமக்களின் குற்றச்சாட்டுகளுக்கு எந்த வித பதிலும் சொல்லாமல், அப்படியே இடத்தினை விட்டு கிளம்பினார். இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

பேட்டி : அப்பகுதியில் பாதிக்கப்பட்டு வரும் பெண்கள் 

வீடியோவை காண

சி.ஆனந்தகுமார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குற்றவாளியுடன் தனக்கு நடக்க இருந்த திருமணத்தை நிறுத்திய துணிச்சல் பெண்