உற்சாகத்தில் அதிமுக: ஜெ.வை பற்றி தம்பிதுரை சொன்ன சங்கதி!
உற்சாகத்தில் அதிமுக: ஜெ.வை பற்றி தம்பிதுரை சொன்ன சங்கதி!
Publish Date: Fri, 04 Nov 2016 (14:45 IST)
Updated Date: Fri, 04 Nov 2016 (14:50 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 44 நாட்கள் ஆகிவிட்டது. இந்நிலையில் தமிழகத்தில் மூன்று தொகுதியில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல் பிரச்சாரத்தில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சொன்ன செய்தி அதிமுகவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து அந்த தொகுதி தேர்தல் பொறுப்பாளரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தம்பிதுரை முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பல பரபரப்பு தகவல்களை வெளியிட்டார். அதில், முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் தேறி வருவதாகவும், அவருக்கு தற்போது அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையால் 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஜெயலலிதா எப்படி இருந்தாரோ அதுபோல உற்சாகமாவும், உத்வேகத்துடனும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வெளியே வருவார் என கூறினார்.
தம்பிதுரையின் இந்த பேச்சை கேட்ட அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உட்பட அதிமுக தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் ஆரவாரம் செய்தனர்.