Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமித்ஷாவிற்கே சவால் விடும் தம்பித்துரை - பின்னணியில் ஆடிட்டர் குருமூர்த்தியா?

அமித்ஷாவிற்கே சவால் விடும் தம்பித்துரை - பின்னணியில் ஆடிட்டர் குருமூர்த்தியா?
, திங்கள், 21 மே 2018 (15:33 IST)
தமிழகத்தில் தேசிய கட்சிகள் காலூன்ற முடியாது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
இந்திய அளவில், பா.ஜ.க கட்சி தனிப்பெரும்பான்மையுடன் பல்வேறு மாநிலங்களில், தன் கட்சியையும், ஆட்சியையும் நிலை நிறுத்தி வரும் நிலையில், தென்னிந்தியாவில் உள்ள, கர்நாடகாவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சட்டசபை தேர்தலில் 104 சீட்டுகள் பா.ஜ.க கட்சியின் எம்.எல்.ஏ க்கள் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றும் எடியூரப்பாவால் 55 மணி நேரம் மட்டுமே முதல்வராக இருக்க முடிந்தது.
 
எனவே, பா.ஜ.க-வின் தேசிய தலைவர் அமித்ஷா, அடுத்த தெலுங்கானா, தமிழ்நாட்டின் தேர்தல்களில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.
 
இந்நிலையில், கரூர் மக்களவை உறுப்பினரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பித்துரை, ஊடகங்களுக்கு அளிக்கும் பேட்டிகளில், தென்னிந்தியாவில் பாஜக-வால் கால் ஊன்ற முடியாது தேசிய கட்சிகளே காணாமல் போகும் நிலை ஏற்படும் என்று நேரிடையாக, ஊடகங்களில் பா.ஜ.க வை விமர்சித்து வருகின்றார். 
webdunia

 
பா.ஜ.க-வை பற்றி விமர்சித்தால், கடுமையாக தாக்குதலும், விவாதமும் நடத்தி வரும் ஆடிட்டர் குருமூர்த்தி, கடந்த சில மாதங்களாகவே, நோட்டாவிடம் தோற்றுப்போன தேசிய கட்சிகள் என்று ஆ.கே.நகர் தேர்தலை வைத்து ஆங்காங்கே பேசி வந்த தம்பித்துரை, தற்போது, வெந்த புண்ணில் வேலை பாய்ச்சி வருவது போல், தேசிய கட்சிகள் காணாமல் போய் விடும் என்றும், அதற்கு உதாரணம் தான், கர்நாடகாவில் எடியூரப்பா ராஜிநாமா செய்தது என்றும், அங்கே மாநில கட்சிகள் தான் ஆட்சியை பிடித்துள்ளன என்றும் பேசி வருகின்றார். 
 
மக்களவை துணை சபாநாயகர், அதுவும் அதே கட்சியில் மத்தியில் ஆளும் இடத்தில் இருந்து அதே பா.ஜ.க வின் தயவோடு தான் தமிழக அரசும் இயங்கும் பட்சத்தில், தேசிய கட்சியையே சாடுவது மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால்., தம்பித்துரை கடந்த இரு வருடங்களாகத்தான், தமிழ் உணர்வையும், திராவிட கட்சிகளையும் பேசி வருகின்றார். மற்ற நேரத்தில் துணை குடியரசுத்தலைவர் பதவிக்காகவும், மத்திய அமைச்சர் பதவிக்காகவும் இதே பா.ஜ.க அரசிடம் முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வகையிலும், டெல்லி வட்டாரத்தில் கேட்டதும், அதற்கு சிபாரிச்சிற்காக பா.ஜ.க கட்சியின் பல மேல்மட்ட அளவில் சிபாரிசிற்காக சென்ற நிகழ்ச்சியும் அப்போது அரங்கேறியது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
 
- சி.ஆனந்தகுமார்
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எங்கள் கூட்டணியில் குழப்பம் இல்லை: குமாரசாமி விளக்கம்!