Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜயபாஸ்கர் வீட்டில் இருந்த ஆவணங்களை அழித்த தளவாய் சுந்தரம்: கைதாவாரா டெல்லி சிறப்பு பிரதிநிதி!

விஜயபாஸ்கர் வீட்டில் இருந்த ஆவணங்களை அழித்த தளவாய் சுந்தரம்: கைதாவாரா டெல்லி சிறப்பு பிரதிநிதி!

Webdunia
சனி, 8 ஏப்ரல் 2017 (10:06 IST)
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நேற்று காலை 6 மணி முதல் இன்று அதிகாலை 4 மணி வரை வருமான வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இது.


 
 
இந்த சோதனையின் போது அவரது உதவியாளர்களிடமிருந்து 4.5 கோடி வரை பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. மேலும் ஏராளமான ஆவனங்கள் மற்றும் ஆர்கே நகர் தொகுதியில் பணம் பட்டுவாடா செய்ததற்கான ஆதரங்கள் எல்லாம் சிக்கியதாக கூறப்பட்டது.
 
ஆனால் நேற்றைய வருமான வரித்துறை சோதனையின் போது முக்கிய ஆவணம் ஒன்றை விஜயபாஸ்கரின் கார் டிரைவர் எடுத்துவிட்டு ஓடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த ஆவணம் மதில் சுவர் வழியாக வீசப்பட்டு விஜயபாஸ்கரின் ஆதரவாளரால் எடுக்கப்பட்டு மறைக்கப்பட்டது. அவரை சிஆர்பிஎஃப் வீரர்களால் பிடிக்க முடியவில்லை.
 
முன்னதாக விஜயபாஸ்கரை வீட்டை விட்டு வெளியே விடாமலும், வெளியில் இருந்து யாரையும் உள்ளே விடாமல் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. ஆனால் டெல்லியின் தமிழக சிறப்பு பிரதிநிதி முன்னாள் எம்பி தளவாய் சுந்தரம் அராஜகமாக விஜயபாஸ்கரின் வீட்டில் நுழைந்தார்.
 
அவர் உள்ளே செல்லும் போது அவரது கையில் எதுவும் இருக்கவில்லை. ஆனால் வெளியே வரும் போது கையில் ஆவணங்களுடன் வந்து அதனை மறைமுகமாக விஜய்பாஸ்கரின் கார் டிரைவரிடம் கொடுத்தார். அதனை தான் அந்த கார் டிரைவர் எடுத்துக்கொண்டு ஓடி மதில் சுவர் வழியாக வெளியே வீசினா. கார் டிரைவரை பிடித்த சிஆர்பிஎஃப் வீரர்கள் அவரை தடியால் அடித்து உதைத்தனர்.
 
ஆனால் அந்த ஆவணத்தை கைப்பற்ற முடியவில்லை. முன்னாள் எம்பி தளவாய் சுந்தரம் வருமான வரித்துறையினரை வேலை செய்யவிடாமல், அங்கு ஒரு பதற்றமான சூழலை உருவாக்கி விஜயபாஸ்கரின் வீட்டில் இருந்த ஆவணத்தை அழித்த குற்றத்திற்காக கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக வருமான வரித்துறையினர் புகார் அளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவரது டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி பறிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செவ்வாய் கிரகத்தில் கடற்கரை.. 300 கோடி ஆண்டுகள் பழமையானது என தகவல்..!

கேதார்நாத் கோவில் நடை திறப்பது எப்போது? முன்பதிவு தேதி அறிவிப்பு..!

பழங்கள் மற்றும் உணவு கழிவுகளில் கான்கிரீட்.. ஐஐடி மாணவர்களின் கண்டுபிடிப்பு.!

ஜேஇஇ 2-ம் கட்ட தேர்வு: விண்ணப்பங்களை திருத்தம் செய்வது எப்போது?

முதலில் சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்திற்கு அனைத்து கட்சியை கூட்டுங்கள்: அன்புமணி

அடுத்த கட்டுரையில்
Show comments