சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு தமிழக முதல்வர் உள்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் அந்த வகையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது சமூக வலைதளத்தில் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார் அவர் தனது வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
பேரன்பிற்கும் மரியாதைக்கும் உரிய சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
அதேபோல் பாஜக தலைவர் அண்ணாமலை தனது வாழ்த்து செய்தியில், எளிய பின்னணியில் இருந்து வந்து, தனது கடும் உழைப்பாலும், மேன்மையான பண்புகளாலும், இந்தியத் திரையுலகின் அடையாளங்களில் ஒருவராக உயர்ந்திருக்கும், அன்புக்கும் மரியாதைக்கும் உரிய, சூப்பர் ஸ்டார் திரு ரஜினிகாந்த் அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, மூன்று தலைமுறைகளை, தனது வசீகரத்தால் கட்டிப் போட்டிருக்கும் சூப்பர் ஸ்டார் திரு ரஜினிகாந்த் அவர்கள், மேலும் பல்லாண்டுகள் நலமுடன் ஆரோக்கியத்துடன் வாழ, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.