Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இரண்டே மாதத்தில் பத்தாயிரம் பேருக்கு தமிழி பயிற்சி நிறைவு!

இரண்டே மாதத்தில் பத்தாயிரம் பேருக்கு தமிழி பயிற்சி நிறைவு!
, வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (21:36 IST)
பல்லாயிரக்கணக்கானோர் இரண்டு மாதங்களில் தமிழ் பயிற்சி முடித்தனர்!

குளித்தலை கிளை நூலகம் சார்பில் நடைபெற்ற 'தமிழி' பயிற்சி பட்டறையில் தகவல்! 
 
குளித்தலை கிளை நூலக வாசகர் வட்டம் சார்பில் குளித்தலை பகுதி அனைத்து பள்ளி மாணவர்களுக்கு தமிழ் பிராமி கல்வெட்டு எழுத்துக்களை (தமிழி) எழுதுவது குறித்த பயிற்சி திருவள்ளுவர் மாணவர் இளைஞர் பேரியக்க தேசிய ஒருங்கிணைப்பாளரும் தமிழி பயிற்சியாளருமான முனைவர்.ராமசுப்பிரமணியம் தலைமையில் குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. 
 
பயிற்சி வகுப்பை வாசகர் வட்ட தலைவர் கோபால தேசிகர் தொடங்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். 
 
திருவள்ளுவர் மாணவர் இளைஞர் பேரியக்க தேசிய ஒருங்கிணைப்பாளரும் நாடு முழுவதும் தமிழி பயிற்சி பட்டறைகளை நடத்தி வருபவருமான ராமசுப்பிரமணியம் குளித்தலை பகுதி மாணவ-மாணவிகளுக்கு தமிழி எழுத்துப் பயிற்சி வழங்கினார். 
 
அப்போது, "தமிழி எழுத்துக்கள் சங்ககாலத்தில் பிராமி எழுத்துக்களாக கல்வெட்டுகளில் எழுதப்பட்டிருந்தது,  அவற்றை தற்போது எவ்வாறு எழுதுவது என்பது குறித்து நாடு முழுவதும் மாணவ மாணவியருக்கும் ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளித்து வருகிறேன். தமிழ் மொழியின் ஆதி எழுத்து வடிவம் ஆகிய 'தமிழி' எழுத்துக்களை இளைய தலைமுறையினர் ஒரு லட்சம் பேருக்கு நிகழாண்டில் கொண்டு சேர்க்கும் நோக்கில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தமிழி பயிற்சி பட்டறைகள் நடத்தி வரும் நிலையில், தற்போது இரண்டே மாதங்களில் 10,000 பேருக்கு பயிற்சியை நிறைவு செய்துள்ளோம்,"  என்று தெரிவித்தார். 
 
மேலும் தமிழி எழுத்து வடிவில் 25 திருக்குறள்களை எழுதி குளித்தலை கிளை நூலகத்தில் பள்ளி மாணவ மாணவிகள் வழங்கினால் அவர்களுக்கு பரிசுகள் மற்றும் தமிழி கற்றுக் கொண்டதற்கான பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். 
 
பின்னர் குளித்தலை கிளை நூலகத்தில் போட்டித் தேர்வுகளுக்காக  தயார் செய்து வரும்  இளைஞர்களுடன் போட்டித்தேர்வுகளில் வெற்றி பெறுவது குறித்த  கலந்துரையாடல் நடைபெற்றது. இந்நிகழ்வில் குளித்தலை கிளை நூலக நூலகர் ஆனந்த கணேசன், நூலக பணியாளர்கள் போதும்பொண்ணு, அகிலன், வாசகர் வட்ட நிர்வாகிகள் முருகானந்தம், சுந்தர், பல்வேறு பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் உட்பட பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
11 Attachments

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உணவு விநியோகச் சேவையில் களமிறங்கும் அமேசான் !