“தமிழகத்தில் தேனாறும் பாலாறும் ஓடும்” - உதயநிதி துணை முதல்வரானது குறித்து இபிஎஸ் கிண்டல்..!

Senthil Velan
திங்கள், 30 செப்டம்பர் 2024 (17:03 IST)
உதயநிதி தமிழகத்தின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் தமிழகத்தில் தேனாறும் பாலாறும் ஓடும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கிண்டலாக பேசி உள்ளார்.
 
சேலத்தில் செய்தியாளர்களை அவர்,  மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி மிக மிக மெத்தனமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று குற்றம் சாட்டினார். 

கடந்த ஆண்டு இந்த துறையினுடைய அமைச்சர், சென்னையின் மேயர், முதலமைச்சர் எல்லோரும் செய்தியாளர்களிடம் பேசும்போது மழைநீர் வடிகால் பணி சுமார் 90 சதவீத பணிகள் நிறைவு பெற்றதாக சொன்னார்கள் என்றும் இன்று வரை அந்த பணி நிறைவு பெறவில்லை என்றும் எடப்பாடி புகார் தெரிவித்தார்.
 
இனியாவது இந்த அரசு கும்பகர்ண தூக்கத்திலிருந்து விழித்து கொண்டு மழைநீர் வடிகால் பணியை துரிதமாக நிறைவேற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். செந்தில் பாலாஜி அமைச்சராகிவிட்டார் என்றும் தற்போது அவர் நீதிமன்ற நிபந்தனைகளை மீறுகின்ற பொழுது காவல்துறை நடவடிக்கை எடுக்குமா என்பது ஐயப்பாடாக இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.


ALSO READ: “விஜய் கட்சி கூட்டத்தில் பெண்ணுக்கு நேர்ந்த கதி” - கேள்வி கேட்டதால் தனியறையில் அடைத்த பவுன்சர்கள்.!!
 
தமிழகத்தின் துணை முதலமைச்சராக உதயநிதி பொறுப்பேற்றவுடன் தமிழகத்தில் தேனாறும் பாலாறும் ஓடும் என்று எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் செங்கோட்டையனுக்கு என்ன பதவி.. விஜய் சந்திப்பில் தீவிர ஆலோசனை..!

ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்.. வெங்காயத்திற்கு இறுதி சடங்கு செய்த விவசாயிகள்..!

விஜய் வீட்டுக்கு சென்றார் செங்கோட்டையன்.. நாளை தவெகவில் அதிகாரபூர்வ இணைப்பு..!

இம்ரான்கான் சிறையில் கொலை செய்யப்பட்டாரா? சமூகவலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

உரிமையை கொடுங்கள், பிச்சை வேண்டாம்": தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய த.வெ.க.

அடுத்த கட்டுரையில்
Show comments