சேலத்தில் உள்ள அரசு இரும்பாலையின் ஒரு பகுதியில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய தற்காலிக மருத்துவமனை அமைக்கபப்ட உள்ளது.
தமிழகத்திலும் வட மாநிலங்களைப் போல மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறை, மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை போன்ற இடர்பாடுகள் உருவாக ஆரம்பித்துள்ளன. இந்நிலையில் தற்காலிக மருத்துவமனைகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு கட்டமாக சேலம் இரும்பாலையின் ஒரு பகுதியில் ஆக்ஸிஜன் அளிக்கும் வசதியுடன் கூடிய 500 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த சிகிச்சை மையம் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.