Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

களைகட்டிய ஜல்லிக்கட்டு..! களத்தில் வீரர்களை மிரள வைத்த காளைகள்..!!

jallikattu

Senthil Velan

, திங்கள், 12 பிப்ரவரி 2024 (15:07 IST)
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூர் ஜமீனுக்கு பாத்தியப்பட்ட ஜக்கம்மாள் கோவிலின் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு  பாரம்பரிய ஜமீன் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.
 
இந்த போட்டியில் 681 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் களம் கண்டு வருகின்றனர். சீறிவரும் காளைகளை தீரத்துடன் மாடுபிடி வீரர்கள் அடக்கி வருகின்றனர். திமிழுடன் திமிரி வரும் காளைகள் மாடுபிடி வீரர்களை பந்தாடி வருகிறது. 
 
தமிழகத்தில் எங்கும் இல்லாத வகையில் முதன்முறையாக ஜல்லிக்கட்டில் வெற்றி  பெறும் சிறந்த காளைக்கு டாடா ஏசி வாகனமும், சிறந்த மாடுபிடி வீரருக்கு ஆட்டோ, இரண்டு மற்றும் மூன்றாம் பரிசு பெறும் மாடுபிடி வீரர்களுக்கு இருசக்கர வாகனமும் பரிசாக வழங்கப்பட்ட உள்ளது.,
 
உசிலம்பட்டி கோட்டாச்சியர் ரவிச்சந்திரன், டிஎஸ்பி நல்லு தலைமையில் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து காளைகள் பங்கேற்றுள்ள சூழலில் அனைத்து காளைகளுக்கும் சிறப்பு பரிசாக சேர், வெற்றி பெறும் காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு தங்கம், வெள்ளி காசுகள், பீரோ, சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.


தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ள பார்வையாளர்கள் மேடையில் அமர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுகவை விட ஒரு தொகுதி அதிகம், ஆனால் ஒரு கண்டிஷன்: தேமுதிகவுக்கு பாஜக நிபந்தனை..!