Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’லட்சுமி.. எங்கள விட்டு போறியேம்மா’ கதறி அழுத மக்கள்! – ஆயிரக்கணக்கானோர் சூழ இறுதி ஊர்வலம்!

Lakshmi Elephant
, புதன், 30 நவம்பர் 2022 (16:34 IST)
புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமியின் இறுதி ஊர்வலத்தில் மக்கள் கதறி அழுத காட்சி பார்ப்போரை கலங்க செய்துள்ளது.

புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் கோவிலில் கோவில் யானையாக கடந்த 25 ஆண்டு காலமாக லட்சுமி யானை இருந்து வந்தது. லட்சுமி யானை தெருக்களில் செல்லும்போது மக்கள் அதற்கு பாசமாக பழங்கள் கொடுப்பது வழக்கம்.

அப்பகுதி மக்களின் செல்லப்பிள்ளையாக இருந்த லட்சுமிக்கு கடந்த சில ஆண்டுகள் முன்னதாக சர்க்கரை நோய் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் லட்சுமியை தினசரி காலை நடைப்பயிற்சி அழைத்து செல்வது வழக்கமாக இருந்தது. அவ்வாறாக இன்று காலை நடைபயிற்சி சென்றபோது லட்சுமி திடீரென மயங்கி விழுந்து இறந்தது. யானை இறப்பிற்கு மாரடைப்பு காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இறந்த லட்சுமி யானை கோவில் முன்பு வைக்கப்பட்டிருந்த நிலையில் ஏராளமான மக்கள் கண்ணீர் மல்க லட்சுமிக்கு பூக்கள் தூவியும், மாலை அணிவித்தும் அஞ்சலி செலுத்தினர். ஏராளமான மக்கள் சூழ லட்சுமியின் இறுதி ஊர்வலம் தற்போது அப்பகுதியில் நடந்து வருகிறது. அனைத்து மக்களின் செல்லப்பிள்ளையான லட்சுமி யானை உயிரிழந்த சம்பவம் புதுச்சேரியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Edit By Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லிவ் இன் காதலியை சுவற்றில் மோதி கொன்ற காதலன்! – மற்றொரு அதிர்ச்சி சம்பவம்!