கியாஸ் சிலிண்டர் முன்பதிவில் திடீர் கோளாறு: பொதுமக்கள் அவதி!

Webdunia
புதன், 7 செப்டம்பர் 2022 (10:39 IST)
கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்வதில் திடீரென கோளாறு ஏற்பட்டுள்ளதை அடுத்து சிலிண்டர் முன்பதிவு செய்ய முடியாமல் பொதுமக்கள் பெரும் சிக்கலில் உள்ளனர். 
 
தொழில்நுட்ப கோளாறு காரணமாக கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்வதில் பிரச்சினை ஏற்பட்டு இருப்பதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது. இதனால் முன்பதிவு செய்ய முயற்சித்த பொதுமக்கள் முன்பதிவு செய்ய முடியாமல் உள்ளனர்
 
இந்த நிலையில் இது குறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
 
வாடிக்கையாளர்கள் குறுஞ்செய்தி, 77189-55555 என்ற எண்ணுக்கு குரல் பதிவு மூலம் முன்பதிவு செய்யலாம். அல்லது 84549-55555 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் அல்லது இந்த எண்ணில் நேரடியாக பேசியும், 75888-88824 வாட்ஸ்-அப் மூலமும், வினியோகஸ்தர்களின் தொலைபேசி எண் மற்றும் நேரடியாக சென்றும் முன்பதிவு செய்து கொள்ளலாம். உங்கள் முன்பதிவு பதிவு செய்யப்படும். முடிந்தவரை விரைவில் சிலிண்டரை உங்களுக்கு வழங்குவோம். விரைவில் சிக்கலைத் தீர்த்துவிடுவோம் என்று நம்புகிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10வது மாடியில் உயிரை பணயம் வைத்த கள்ளக்காதலி.. கள்ளக்காதலனின் மனைவியிடம் இருந்த தப்பிக்க எடுத்த ரிஸ்க்..!

என்னை எதிர்த்து செங்கோட்டையன் போட்டியிடப் போகிறாரா? நயினார் நாகேந்திரன் கேள்வி..!

இன்று வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கிடையாது.. அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை..!

SIR கணக்கெடுப்பு படிவங்களை அளிக்க இன்று கடைசி நாள்! 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

அடுத்த கட்டுரையில்
Show comments