Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கழுத்தறுத்து ஆசிரியை கொலை: கணவன் கைது

Webdunia
திங்கள், 19 மார்ச் 2018 (11:45 IST)
ராமநாதபுரத்தில் பள்ளி ஆசிரியை கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது கணவரை போலீசார் சந்தேகத்தின் பெயரில் கைது செய்துள்ளனர்.
 
ராமநாதபுரம் மாவட்டம் கோட்டைமேடு பகுதியில் வசித்து வருபவர் மோகன் ராஜா. இவரது மனைவி சண்முகப்பிரியா ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
 
இந்நிலையில் , இன்று சண்முகப்பிரியா தனது வீட்டில் கழுத்தறுத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார். இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் போலீசார்க்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவரது உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
 
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அவர் அணிந்திருந்த சங்கிலி திருடுபோனதும், அவரது கழுத்தை துணி காயப் போடும் கயிரால் அறுக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும், போலீசார் விசாரணைக்காக அவரது கணவரை சந்தேகத்தின் பெயரில் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர்.. மும்பையில் 250 பேர், ஹரியானாவில் 237 பேர் கைது..!

8 பாஸ்போர்ட், 4 முறை பாகிஸ்தான் பயணம்.. உளவு சொன்னதால் கைதான வாலிபரிடம் விசாரணை..

அதிமுக என்ற இயக்கத்தை ரெய்டுகள் அசைத்து கூட பார்க்க முடியாது: ஈபிஎஸ்

அரசு ஊழியர்களை அமலாக்கத்துறை துன்புறுத்துகிறது: அமைச்சர் முத்துசாமி கண்டனம்..!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த கல்லூரி மாணவர் கைது.. ரகசிய தகவல் பரிமாறப்பட்டதா?

அடுத்த கட்டுரையில்
Show comments