சிறுமிக்கு சூடு வைத்த ஆசிரியைகள்....போலீஸார் வழக்குப் பதிவு

Webdunia
வியாழன், 19 மே 2022 (15:39 IST)

1ஆம் வகுப்பு மாணவிக்கு சூடு வைத்துக் கொடுமைப்படுத்திய பள்ளி நிர்வாகம் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.   

சென்னை வியாசர்பாடி தாமோதரன் தெருவைச் சேர்ந்தவர் திவ்வா(27). இவரது மகள்(6 வயது) மன வளர்ச்சி குன்றியதாகத் தெரிகிறது. சிறுமி பெரம்பூர் சாலையில் உள்ள கல்கி ரங்க நாதன் மான்போர்ட் ஸ்பெஷல் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகின்றார்.

இந்த நிலையில் நேற்று மாலை சிறுமியை அழைத்துப்போக அவரது தந்தை பள்ளி வந்துள்ளார். அப்போது, சிறுமியில் கை, கால்களில் காயம் இருக்கிறது.  ஏன் இந்த நிலையில் சிறுமியை பள்ளிக்கு அனுப்புகிறீர்கள் என  கேட்டுள்ளார்.

காலையில்  பள்ளியில் விடும்போது, சிறுமி நன்றாக இருந்தார் என சிறுமியின் தந்தை கலைச்செல்வன் ஆசிரியர்களிடம் வாதிட்டுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் திவ்யாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் காவல் நிலையத்திற்குச் சென்று புகாரளித்தார்.

எனவே, போலீஸார் விசாரணை நடத்தி,  சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.தற்போது ஆசிரியைகளிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!..

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments