பெண் ஆசிரியர்களையும், பெண் ஆசிரியர் பயிற்றுநர்களையும் ஒருமையில் அழைப்பதோடு, கூட்டத்திற்கு தாமதமாக வந்தால் ஊர் மேயப்போனீர்களா ? என்று தரம் தாழ்ந்து பேசும் கரூர் மாவட்ட சி.இ.ஒ வை கண்டித்து ஆசிரியர்களின் தொடர் போராட்டம்.
கரூரில் ஆசிரியர்கள் 4 வது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டம் – அரசு இயந்திரம் ஆசிரியர்களையும் திரும்பி பார்க்க வேண்டும் – தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலப்பொதுச்செயலாளர் மயில் அதிரடி பேட்டி
தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், இன்று நான்காவது நாளாக, கரூர் தாலுகா அலுவலகம் முன், உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகின்றது. கடந்த திங்கள் அன்று துவங்கிய தொடர் உண்ணாவிரதப்போராட்டம் கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை கண்டித்து நடைபெற்று வருகின்றது. காலை துவங்கும் இந்த போராட்டம் மாலை வரை முடிகின்றது. மீண்டும் அடுத்த நாள் காலை துவங்கி மாலை என்று இன்றுடன் 5 வது நாளாகவும் இந்த ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினரின் உண்ணாவிரதபோராட்ட்த்திற்கு சிறிதும் செவிசாய்க்க வில்லை அரசு, இந்நிலையில், இன்று 5 ம் நாளாக நடைபெற்று வந்த இந்த உண்ணாவிரதபோராட்டத்திற்கு, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் மயில் தலைமை வகித்தார். அதில் கூட்ட்த்தில் பேசிய போது., கரூர் மாவட்ட கல்வித்துறையில் விதியை மீறி, வேறு கல்வி மாவட்டத்துக்கு பணி மாறுதல் வழங்கிய சி.இ.ஓ., மதன் குமாரை கண்டித்து, இந்த தொடர் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. ஏழு பேரின் பணி மாறுதல் ஆணையை ரத்து செய்யக்கோரியும், சி.இ.ஓ., மதன் குமார் மீது, பள்ளிக்கல்விதுறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார். இதில் கரூர் மாவட்ட செயலாளர் ஜெயராஜ் உள்பட பலர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநில பொதுச்செயலாளர் மயில், தெரிவித்த போது., தொடக்க கல்வித்துறையில், ஆசிரியர் ஒருவரை தற்காலிகமாக பணி இடைநீக்கம் செய்தார். அதற்காக, முறையிட்டும் நீதி கிடைக்காத நிலையில், போராட்டம் நடத்திய 7 நபர்களை தற்காலிக பணி இடைநீக்கம் செய்து உத்திரவு போட்டுள்ளார். தன்னுடைய மாவட்டத்தில், தன்னை எதிர்த்து கல்வித்துறையில் போராடக்கூடாது என்று உள்ளார். அதுமட்டுமில்லாமல், ஒரு குற்றத்திற்காக இரண்டு தண்டனைகளை கரூர் மாவட்ட சி.இ.ஒ உருவாக்கி வருகின்றார். அதுமட்டுமில்லாமல், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொரோனா விடுமுறையின் போது நடைபெற்ற Zoom வழியாக நடைபெற்ற ஆசிரிய பயிற்றுநர்கள் கூட்டத்திற்கு தாமதமாக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய பயிற்றுநர்கள் தாமதமாக வந்தால் அவர்கள் ஆண் ஆசிரியர்களாக இருந்தால் மணி ஆட்டப்போனீர்களா ? என்றும், பெண் ஆசிரியர்களாக இருந்தால் ஊர் மேயப்போனீர்களா ? என்றும் தராதார மிக்க சொற்களை கொண்டு பேசி வருகின்றார். ஆகவே ஆசிரியர்களை அநாகரீகமாக வார்த்தைகளை கொண்டு கையாழும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடப்பட்டது