குடிபோதையில் பள்ளிக்கு வந்த உடற்கல்வி ஆசிரியர்; காரைக்குடியில் பரபரப்பு

Webdunia
சனி, 7 ஏப்ரல் 2018 (11:13 IST)
மாணவர்களுக்கு முன்னுதாரணமாய் இருக்க வேண்டிய ஆசிரியரே மது அருந்தி விட்டு வகுப்பறையில் விழுந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் ரஜினிகாந்த். இவர் திருபுவனம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
 
இந்நிலையில் நேற்று பள்ளிக்கு வந்த அவர், மதிய உணவு இடைவேளையில் வெளியே சென்று அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு, பள்ளிக்கு திரும்பினார். பள்ளிக்கு வந்த அவர் மதுபோதையில் வகுப்பறையில் விழுந்தார். போதையில் இருந்த அவரை சக ஆசிரியர்கள் தட்டி எழுப்பினர். ஆனால் அவரோ உலறியபடி படுத்து கிடந்தார்.
 
இதனையடுத்து ஆசிரியர்கள் உயர் கல்வி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், போதை ஆசிரியரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பள்ளிக்கு குடித்துவிட்டு வந்த ரஜினிகாந்த் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி நேரத்தில் மெட்ரோ ரயில் சேவையில் திடீர் மாற்றம்.. 14 நிமிடத்திற்கு ஒரு ரயில் தான்..!

காலையில் குறைந்த தங்கத்தின் விலையில் மாலையில் நேரத் திடீர் ஏற்றம்: சென்னை நிலவரம்

அரசு ஊழியர்களுக்கு சம்பள பாக்கி.. முதலமைச்சருக்கு சம்பள உயர்வா? பாஜக கண்டனம்..!

போலி உலக சாதனை சான்றிதழ் என அம்பலம்.. தர்ம சங்கடத்தில் முதல்வர் சித்தராமையா..!

இந்தியாவின் ஆதார் கார்டு போலவே இங்கிலாந்து ‘பிரிட் கார்டு’.. பிரதமர் ஸ்டார்மர் திட்டம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments