Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1- ஆம் வகுப்பு மாணவனை சாதிப் பெயரை கூறி கன்னத்தில் அடித்த ஆசிரியர்

Webdunia
வியாழன், 4 ஆகஸ்ட் 2016 (13:10 IST)
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் 1-ஆம் வகுப்பு மாணவன் ஒருவனை கன்னத்தில் அடித்ததாகவும், சாதிப் பெயரை சொல்லி திட்டியதாகவும் ஆசிரியர் ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


 
 
திருத்தங்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடற்கரை என்பவரது 6 வயது மகன் ஆறுமுகராஜ் 1-ஆம் வகுப்பு படித்து வருகிறான். சில தினங்களுக்கு முன்னர் மாணவன் ஆறுமுகராஜ் வீட்டுப்பாடம் செய்யவில்லை என்ற காரணத்துக்காக கன்னிகாதேவி என்ற ஆசிரியர் கன்னத்தில் அடித்துள்ளார்.
 
இதனால் காது வலிக்கிறது என அழுதுகொண்டே மாணவன் பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து பெற்றோர்கள் பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுக்கு எழுத்துப்பூரவமாக புகார் அளித்தனர். இதனையடுத்து ஆசிரியர் கன்னிகாதேவி மீது விசாரணை நடத்தப்பட்டு அவருக்கு பணியிடை மாற்றம் வழங்கப்பட்டது.
 
இந்நிலையில் மாணவனின் தந்தை கடற்கரை திருத்தங்கல் போலீசில் ஆசிரியர் கன்னிகாதேவி தனது மகனை அடித்ததாகவும், அதனால் காது வலி ஏற்பட்டதாகவும் புகார் அளித்தார். இதனையடுத்து ஆசிரியர் மீது திட்டுதல், அடித்தல், மிரட்டல் மற்றும் மாணவனை சாதியைச் சொல்லித் திட்டிய குற்றங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்சி அதிகாரத்தை வைத்து விஜய்யை பயமுறுத்த முடியாது! - நடிகர் சௌந்தரராஜா!

பாஸ்போர்ட் பெறுவதற்கு பிறப்பு சான்றிதழ் கட்டாயம்.. வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவு..!

14 வயது சிறுமியை திருமணம் செய்த 16 வயது சிறுவன்.. திருப்பூர் அருகே அதிர்ச்சி சம்பவம்..!

சூட்கேஸில் இளம் பெண் பிணம்.. ராகுல் காந்தி பாத யாத்திரையில் கலந்து கொண்டவர்..!

நான் ஆட்சியில் இருந்திருந்தா அறுத்து விட்ருப்பேன்! - வன்கொடுமை சம்பவங்கள் குறித்து அன்புமணி ஆவேசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments