விழுப்புரத்தில் ஆன்லைன் லாட்டரியில் பணத்தை இழந்த பட்டதாரி ஆசிரியர் திருடனாய் மாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேசம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது வீட்டில் ஆள் இல்லாதபோது உள்ளே புகுந்த திருட்டு கும்பல் ரூ.10 லட்சம் மதிப்புடைய 13 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் பிரம்மதேசம் போலீஸார் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
அவர்கள் விசாரணையில் மணிகண்டனின் உறவினர்களான சிவக்குமார், பிரவீன்குமார் என்ற இருவர் பிடிபட்டனர். அவர்கள் தாங்கள் நகையை திருடியதை ஒப்புக் கொண்டனர். விசாரணையில் சிவக்குமார் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வருவதும், நிறைய கடன் வாங்கி ஆன்லைன் லாட்டரியில் பணத்தை போட்டு இழந்த நிலையில் திருடனாக மாறியதும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K