Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆசிரியர் கைது! பத்மா சேஷாத்திரி பள்ளி ஒத்துழைக்கவில்லை - போலீஸார்

Advertiesment
ஆசிரியர் கைது!  பத்மா சேஷாத்திரி பள்ளி ஒத்துழைக்கவில்லை - போலீஸார்
, திங்கள், 24 மே 2021 (15:55 IST)
சென்னையில் உள்ள பிரபல பள்ளியான பத்மா சேஷாத்திரி பள்ளியில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் சற்றுமுன் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது, மாணவிக்கு செல்போனில் பாலியல் தொந்தரவு அளித்த மடிப்பாக்கத்தைச் சேர்ந்த ஆசிரியர் ராஜகோபாலனை துணைக்காவல் ஆணையர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீஸார்   சுற்றி வளைத்து  கைது செய்தனர்.

இன்று காலையில் இருந்து இந்த விவகாரம் பூதாகரம் ஆனதை அடுத்து,  இது தமிழகத்தில் பேசுபொருளானது. எனவே மடிப்பாக்கத்தில் வசித்து வரும் ராஜகோபாலனை பிடித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும், இந்த விவகாரத்தில் பள்ளி நிர்வாகம் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை என காவல்துறை குற்றம்சாட்டியுள்ளது.

இதற்கிடையே பத்மா ஷேசாத்ரி பள்ளி நிர்வாகம் ஆசிரியர் ராஜகோபாலனை பணியிடை நீக்கம் செய்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விமானத்தில் திருமணம்: விமானத்தின் ஊழியர்கள் அனைவரும் சஸ்பெண்ட்!