சிங்கிள் டீ விலையும் உயர்ந்தது..! தேனீர் பிரியர்கள் அதிர்ச்சி!

Webdunia
திங்கள், 4 ஏப்ரல் 2022 (12:37 IST)
கேஸ் சிலிண்டர் விலை உயர்வை தொடர்ந்து சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தேனீர் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக இந்தியாவில் பெட்ரோல் டீசல் கடுமையான விலை உயர்வை சந்தித்து வரும் நிலையில் கேஸ் சிலிண்டர் விலையும் மாதம்தோறும் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த மாதம் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் ரூ.268 உயர்ந்துள்ளதால் மொத்த விலை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

வணிக சிலிண்டர் விலை உயர்வால் உணவுகளின் விலையை அதிகரிக்க உணவகங்கள் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள தேநீர் கடைகளில் தேநீர் விலை ரூ.12 முதல் ரூ.15 வரை உயர்த்தப்படுவதாக தேநீர் கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மதுரையிலும் தேநீர் விலை ஒரு கப் ரூ.15 என விலை உயர்ந்துள்ளது. சாமானியர்களின் பானமான தேநீர் விலை உயர்ந்துள்ளது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் நெரிசல் பலி: சிபிஐ முதற்கட்ட அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்

நேற்று திடீரென மூடப்பட்ட சென்னை அமெரிக்க தூதரகம்.. என்ன காரணம்?

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா பதவி பறிக்கப்படுகிறதா? நிர்வாகிகளை கூண்டோடு மாற்றும் விஜய்?

வறுமையை ஒழித்த கேரளா! இனியாவது உணருமா தமிழகம்? - அன்புமணி வேதனை!

தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு வந்த புது மணப்பெண் தற்கொலை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments