Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னை மெட்ரோ ரயில்: டாடா நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து..!

சென்னை மெட்ரோ ரயில்: டாடா நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து..!
, செவ்வாய், 18 ஜூலை 2023 (18:37 IST)
சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்டத் திட்டத்தின், 3ம் வழித்தடத்திற்கான ரயில் நிலையங்கள் அமைக்க டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 3வது வழித்தடமான மாதவரம் முதல் சிப்காட் சிறுசேரி வரையிலான ரயில் நிலையங்கள் ரூ.1,204.87 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது!
 
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை மெட்ரோ இரயில்‌ திட்டம்‌ கட்டம்‌: 3 வழித்தடம்‌ 3-ல்‌ மெட்ரோ இரயில்‌ நிலையங்கள்‌. அமைப்பதற்காக டாடா. ப்ராஜெக்ட்ஸ்‌ நிறுவனத்திற்கு ரூ.1200 கோடி மதிப்பில்‌ ஒப்பந்தம்‌ வழங்கம்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம்‌ 10% JICA நிதியுதவியின்‌ ஒரு பகுதியாகும்‌. இதற்கான ஏற்பு கடிதம்‌ டாடா ப்ராஜெக்ட்ஸ்  நிறுவனத்திற்கு வழங்கப்ப்டள்ளது.
 
சென்னை மெட்ரோ இரயில்‌ திட்டம்‌ கட்டம்‌.3 வழித்தடம்‌ 3ல்‌ ஓட்டேரி, பட்டாளம்‌, பெரம்பூர்‌ பேரக்ஸ்‌ சாலை மற்றும்‌ கெல்லிஸ்‌ என நான்கு சுரங்கம்பாதை மெட்ரோ இரயில்‌ நிலையங்கள்‌ மற்றும்‌ அயனாவரம்‌, புரசைவாக்கம்‌ ஆகிய இரண்டு சுரங்கப்பாதை மெட்ரோ இரயில்‌ நிலையங்களில்‌ டயாப்ரம் சுவர் தவிர மற்ற பணிகள்‌ இந்த ஒப்பந்தத்தில்‌ அடங்கும்‌.
 
சென்னை மெட்ரோ இரயில்‌ நிறுவன மேலாண்மை இயக்குநர்‌ மு.சித்திக்‌ தலைமையில்‌, சென்னை மெட்ரோ இரயில்‌ நிறுவனத்தின்‌ இயக்குனர்‌ இ. அர்ச்சுனன், டாடா ப்ராஜெக்ட்ஸ்‌ இறுவனத்தின்‌ நிர்வாக துணைத்‌ தலைவர்‌ ராமன்‌ கமில்‌ ஆகியோர்‌ இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
 
இந்நிகழ்வில் சென்னை மெட்ரோ இரயில்‌ நிறுவனத்தின்‌ தலைமை பொது, மேலாளர்கள்‌ டிலிவிங்ஸ்டோன்‌ எலியாசர்‌, ரேகா பிரகாஷ்‌, இணை பொது மேலாளர்‌ ரிபு டாமன் துபே மற்றும்  டாடா ப்ராஜெக்ட்ஸ்‌ நிறுவனத்தின்‌ உயர் அலுவலர்கள்‌ மற்றும்‌ பணியாளர்கள்‌ உடனிருந்தனர்‌.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மக்களுக்கு குறைந்தபட்ச வருமானத்தை அரசே அளிக்க வேண்டிய தேவை உள்ளது- விசிக முன்மொழிவு