குடிமகன்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி: போராட்டத்தில் குதிக்கும் டாஸ்மாக் ஊழியர்கள்!

Webdunia
சனி, 30 டிசம்பர் 2017 (13:10 IST)
தமிழகம் முழுவதிலும் உள்ள டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜனவரி மாதம் 25-ஆம் தேதி கடையடைப்பு போராட்டத்தில் இறங்க உள்ளனர்.
 
திருச்சியில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க கூட்டம் சங்க மாநில தலைவர் பால்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட தலைவர் முருகானந்தம் மற்றும் அரசு பணியாளர் சங்க பொது செயலாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
இந்த கூட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆதரவாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. டாஸ்மாக் பணியாளர்களின் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற முக்கிய கோரிக்கை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. மேலும் கால முறை ஊதியம் உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
 
இதனையடுத்து வரும் ஜனவரி 25-ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் அடைப்பு போராட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த போராட்டம் குறித்து ஒவ்வொரு மாவட்டம் வாரியாக விளக்க கூட்டம் நடத்துவது மற்றும் மற்ற சங்கங்களிடம் ஆதரவு கேட்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் பிரச்சனையை சிவபெருமான் பார்த்து கொள்வார்: மத்திய அமைச்சர்

நாளை புத்தாண்டு.. இன்று ஸ்டிரைக் செய்யும் ஸோமாட்டோ, ஸ்விக்கி, பிளிங்கிட் , ஜெப்டோ ஊழியர்கள்..!

1 கோடி கிலோ நெய் .. ஒரே நபர் 2,417 மேகி பாக்கெட்டுக்கள் .. 2025ல் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட பொருட்கள்..!

தளபதி விஜய்க்கு அரோகரா!.. திருச்செந்தூர் கோவிலுக்குள் தவெகவினர் அலப்பறை...!....

இந்தியா - பாகிஸ்தான் போரை நாங்கள் தான் நிறுத்தினோம்: புதிதாக உரிமை கொண்டாடும் சீனா..!

அடுத்த கட்டுரையில்
Show comments