Publish Date: Thu, 15 Nov 2018 (12:52 IST)
Updated Date: Thu, 15 Nov 2018 (13:02 IST)
கஜா புயலின் எதிரொலியாக காரைக்கால் பகுதிகளில் 2 மணியுடன் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல் திசைமாறிய காரணத்தால் கடலூர் மற்றும் பாம்பன் பாலம் இடையே கரையைக்கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இன்று இரவு 8 மணி முதல் 11 மணிவரையில் கஜா புயல் கடலூர் மற்றும் பாம்பன் பாலம் இடையே கரையை கடக்க இருக்கிறது. புயலானது மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும், சில நேரங்களில் அதிகபட்சமாக 100 கிலோ மீட்டர் வேகத்திலும், பலத்த காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்தது.
அசம்பாவிதங்களை தடுக்க அந்தந்த மாவட்டங்களில் தமிழக அரசால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கஜா புயலின் வேகமானது 25 கிலோமீட்டராக அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் காரைக்கால் பகுதிகளில் இன்று ஒரு நாள் 2 மணிக்கே டாஸ்மாக் கடைகளை மூடும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.