டாஸ்மாக்கில் ஏற்பட்ட தகராறு… இளைஞர் தாக்கியதில் மீனவர் பலி

Webdunia
வெள்ளி, 13 நவம்பர் 2020 (10:37 IST)
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறில் அந்தோனி அடிமை என்ற மீனவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம் பூத்துறை பகுதியைச் சேர்ந்த அந்தோணி அடிமை. இவர் இருமாநில எல்லையில் உள்ள ஈத்தாமொழி பகுதியில் மீன் கடை வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவர் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்க சென்ற போது சிவா அர்ஜுன் ரவி என்ற இளைஞருடன் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இருவரும் சண்டையிட்டுக் கொண்ட் போது அர்ஜுன் ரவி கல்லால் தாக்கியதில் 55 வயதான அந்தோனி பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கபட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதையடுத்து போலிஸார் இச்சம்பவம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

சீமான்தான் நம்பர் ஒன்!.. டிஜிட்டல் சர்வே மூலம் கிடைத்த ரிசல்ட்!..

வாக்காளர் பட்டியல் SIR படிவத்தை நிரப்ப ஏஐ தொழில்நுட்பம்: புதிய முயற்சி!

40 ஆண்டு அரசியல்.. 10 முறை முதல்வர்.. நிதிஷ்குமாரின் சொத்து மதிப்பு ரூ.1.64 கோடி, 13 பசுக்கள் தானா?

உலகிலேயே கஷ்டமில்லாத பணி கவர்னர் பணி.. கனிமொழி எம்பி கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments