Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வறுமையால் சிறுமியை வீட்டு வேலைக்கு அனுப்பிய தாய்… பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய உறவினர் – அதிர்ச்சி சம்பவம்!

Advertiesment
வறுமையால் சிறுமியை வீட்டு வேலைக்கு அனுப்பிய தாய்… பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய உறவினர் – அதிர்ச்சி சம்பவம்!
, வியாழன், 12 நவம்பர் 2020 (20:58 IST)
சென்னையைச் சேர்ந்த கணவனை இழந்த அந்த பெண் தன் மகளை வீட்டு வேலை செய்ய அனுப்பிய நிலையில் உறவினர்கள் வலுக்கட்டாயமாக அவரைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவளம் பகுதியை சார்ந்த கணவனை இழந்த பெண் ஒருவர் தனது 15 வயது மகளை வீட்டு வேலையில் சேர்த்து விடுமாறு, உறவினர் சகிதா பானு என்பவரோடு அனுப்பி வைத்துள்ளார். அவரை அழைத்துச் சென்ற பானு சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார். இதில் பானுவின் காதலர் மதன்குமார், மதனின் தாய் செல்வி, மதனின் தங்கை சத்யா மற்றும் இன்னும் சில ப்ரோக்கர்களுக்கும் பங்குண்டு என தெரிய வந்துள்ளது.

இதையறிந்து அதிர்ச்சியான சிறுமியின் தாய் வண்ணாரப்பேட்டை போலிஸிடம் புகார் கொடுக்க அவர்கள் சம்மந்தப்பட்டவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எழுத்தாளர் பணி எழுதுவதுதான்... பாடப்புத்தகத்தில் இடம்பெற போராடுவதல்ல - அருத்ததி ராய்