Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து பல லட்சம் ரூபாய் மதுபாட்டில்கள் கொள்ளை: திருச்சியில் பரபரப்பு

Advertiesment
டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து பல லட்சம் ரூபாய் மதுபாட்டில்கள் கொள்ளை: திருச்சியில் பரபரப்பு
, திங்கள், 30 மார்ச் 2020 (19:17 IST)
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக தமிழகத்தில் அத்தியாவசிய தேவையான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டு உள்ளது. இதில் டாஸ்மாக் கடைகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் டாஸ்மாக் கடை கடந்த 5 நாட்களுக்கு மேல் மூடப்பட்டிருப்பதால் குடிமகன்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். ஒரு சிலர் கள்ள மார்க்கெட்டில் மது வாங்கி குடித்த நிலையில் தற்போது அதுவும் காலியாகி விட்டதால் செய்வதறியாது திகைத்து உள்ளனர்
 
இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளின் பூட்டை உடைத்து மது பாட்டில்களை கொள்ளை அடிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் மது பாட்டில்களை உடனடியாக கொடோனுக்கு மாற்றவேண்டும் என்றும் அதிகாரிகள் தரப்பிலிருந்து வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து அதிகாரிகள் பயந்தது போலவே திருச்சி அருகே உறையூரில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்களை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இனிமேலாவது உடனடியாக தமிழக அரசு செயல்பட்டு அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் உள்ள மதுபாட்டில்களை உடனடியாக பாதுகாப்பான குடோனுக்கு மாற்ற வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

22,906 பேர் கைது: ஊரடங்கை மீறியதால் அதிரடி!