தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் கடைகளில் குறிப்பிட்ட மதுபானங்களுக்கு விலை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வரும் நிலையில் 80 எலைட் மதுக்கடைகளையும் டாஸ்மாக் நடத்தி வருகிறது. இந்த கடைகளில் பலவகையான மதுவகைகளுடன் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மதுவகைகளும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
கடந்த சில மாதங்களாக ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் எலைட் கடைகளுக்காக இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு மதுபானங்களான ஜின், விஸ்கி, ரம் உள்ளிட்ட ப்ராண்டுகளின் விலையை உயர்த்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று முதல் 17 வகையான வெளிநாட்டு மதுபானங்களின் டாஸ்மாக் விலை உயர்த்தப்படுகிறது.