Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கணினிமயாகும் டாஸ்மாக்.. மின்னணு முறையில் பணம் செலுத்தும் வசதி..!

Webdunia
சனி, 5 ஆகஸ்ட் 2023 (12:12 IST)
டாஸ்மாக்கை கணினி மயமாக்க டெண்டர் விடப்பட்டுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது.
 
தமிழகத்தில் உள்ள 5 ஆயிரம் டாஸ்மாக் கடைகளை கணினி மயமாக்க அரசு திட்டமிட்டுள்ளது. கணினிமயமாக்க தேவையான உபகரணங்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது
 
மதுபானங்கள் உற்பத்தி, விற்பனை, மதுபானம் இருப்பு  உள்ளிட்ட அனைத்து நடவடிக்கையும் கணினி மயமாக்கப்பட உள்ளது. மேலும் 4,810 டாஸ்மாக் கடைகளில் மின்னணு முறையில் பணம் செலுத்துவதற்கான வசதியும் செய்யப்பட உள்ளது.
 
டாஸ்மாக் முழுவதும் கணினி மயமாக்குவதன் மூலம் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வது தடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்..! - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை எச்சரிக்கை..!

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

அடுத்த கட்டுரையில்
Show comments