Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தஞ்சையில் மது குடித்து இருவர் இறந்ததற்கு என்ன காரணம்? மாவட்ட ஆட்சி தலைவர் தகவல்..!

Advertiesment
tasmac
, திங்கள், 22 மே 2023 (08:13 IST)
தஞ்சையில் உள்ள டாஸ்மாக் பாரில் மது வாங்கி குடித்த இருவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்த நிலையில் இருவரது உயிர் இழப்பிற்கு என்ன காரணம் என்று தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் விளக்கி உள்ளார் 
 
தஞ்சைகள் இரண்டு பேர் மது அருந்தி உயிரிழந்ததற்கு காரணம் என்ன என்பதை ஆய்வு செய்ய மதுபானத்தை தடையவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டதாகவும் அந்த ஆய்வில் மதுவில் சயனைடு கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சித் தலைவர் கூறியுள்ளார். 
 
எனவே மதுபானம் குடித்த இருவர் உயிரிழந்தது தற்கொலை முயற்சியாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் இந்த விவகாரத்தில் பார் உரிமையாளர் தவறு செய்திருந்தால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் உறுதி உறுதி கூறியுள்ளார்
 
 தஞ்சை மாவட்டத்தில் டாஸ்மாக் பாரில் மது அருந்திய இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த மரணத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் விளக்கம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'தமிழகத்தில் மீண்டும் கள்ளு கடைகளை திறக்க வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்..!