தஞ்சை பெரிய கோவில் சித்திரை தேரோட்டம் விழாவிற்கான சிறப்பு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
மே 1ஆம் தேதி உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் சித்திரை தேரோட்டம் நடைபெறவுள்ளது. இதனையடுத்து பெரியகோவில் தேரை அலங்கரிக்கும் பணியில் தீவிரமாக ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தேரை சுத்தம் செய்து வர்ணம் பூசும் பணியை மேற்கொள்ளும் கோயில் ஊழியர்கள் அதன்பின்னர் மேல் பகுதியில் சவுக்கு கட்டைகள் அமைத்து வண்ண வண்ண துணிகளை கொண்டு அலங்காரம் செய்து வருகின்றனர்.
மேலும் பக்தர்கள் வழிபட ஏதுவாக 14 இடங்களில் தேரை நிறுத்த கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.