Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பில் கட்டலைன்னா கரண்ட் கட்! புதிய மோசடி? – மின்சார வாரியம் எச்சரிக்கை!

Webdunia
செவ்வாய், 22 நவம்பர் 2022 (14:40 IST)
மின்சார வாரிய கட்டணம் கட்டாதது போல் எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பி மோசடி செய்யும் கும்பல் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரிய மின்கணக்கீடு மற்றும் கட்டணம் ஆன்லைனிலும், அருகே உள்ள மின்வாரிய அலுவலகங்களிலும் செலுத்தும் வசதி உள்ளது. சமீபத்தில் திமுக பிரமுகரான பத்மப்ரியாவின் தந்தையின் செல்போன் எண்ணுக்கு ஒரு மெசேஜ் வந்துள்ளது.

மின்சார கட்டணத்தை கட்டாததால் மின் இணைப்பு இன்று இரவு நிறுத்தப்படும் என்றும் அதற்கு முன்னால் இந்த எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் ஒரு எண் இருந்துள்ளது. அதை தொடர்பு கொண்டபோது சிலர் இந்தியில் பேசியுள்ளனர்.

இதுகுறித்து பத்மப்ரியா ட்விட்டரில் டாங்கெட்கோவை டேக் செய்து பதிவிட்டிருந்தார். இந்நிலையில் டாங்கெட்கோ தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் “நுகர்வோர் கவனத்திற்கு, இந்த போலியான குறுஞ்செய்தி பரவி வருகிறது. இது போன்ற குறுஞ்செய்தி ஒருபோதும் எங்களிடமிருந்து வராது. பொருட்படுத்தாதீர்” என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments