Publish Date: Fri, 14 Apr 2023 (08:55 IST)
Updated Date: Fri, 14 Apr 2023 (08:57 IST)
முதுநிலை படிப்புகளுக்கான டான்செட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் கல்வி உதவிகளில் எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேர்வதற்கு நுழைய தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் எம்இ, எம்டெக், எம்பிளான், எம்ஆர்க் ஆகிய முதுநிலை படிப்புகளுக்கும் சீட்டா என்றா நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு டான்செட் , சீட்டா ஆகிய தேர்வுகளில் முடிவுகள் இன்று மாலை வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற இந்த தேர்வுகளை ஏராளமான மாணவர்கள் எழுதிய நிலையில் இந்த தேர்வு முடிவுகள் ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்வு முடிவுகளை www.tancet.annauniv.edu என்ற இணையதளத்தில் பார்த்து அறிந்து கொள்ளலாம்