Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சுவாதி வழக்கில் இவர்கள்தான் குற்றவாளிகள் : தமிழச்சி அடுக்கும் ஆதாரங்கள்

சுவாதி வழக்கில் இவர்கள்தான் குற்றவாளிகள் : தமிழச்சி

சுவாதி வழக்கில் இவர்கள்தான் குற்றவாளிகள் : தமிழச்சி அடுக்கும் ஆதாரங்கள்
, வெள்ளி, 26 ஆகஸ்ட் 2016 (09:20 IST)
சுவாதி வழக்கில், ராம்குமாரை அப்பாவி என்றும், தொடக்கத்திலிருந்தே போலீசார் உண்மைகளை மறைத்து வருகின்றனர் என்றும், சமூக வலைதளத்தில் பிரபலமான தமிழச்சி என்பவர்  குற்றம் சாட்டிவருகிறார்.


 

 
மேலும், சுவாதி வழக்கில் யார் குற்றவாளி என்ற உண்மை தெரிந்த பெண்ணை, தமிழகத்தை சேர்ந்த ஒரு காவல் அதிகாரியே கொலை செய்ய முயன்றார் என்று கூறி, அந்த பெண் பேசிய ஆடியோக்களையும் அவர் தன்னுடைய முகநூலில் அவ்வப்போது வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
 
இந்நிலையில், அவர் நேற்று தன்னுடைய பக்கத்தில், சுவாதி வழக்கு குறித்து பல அதிரடியான தகவல்களை கூறியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
 
"சுவாதி படுகொலையை இந்துத்துவ அமைப்புகள்தான் திட்டமிட்டு செய்தன என்று பொய்யான தகவல்களை உண்மை என நிறுவ இஸ்லாமியர் / திராவிடர் / தலித் அமைப்புகள் முயலுகின்றன" என்று கருப்பு முருகானந்தம் குற்றம் சாட்டியுள்ளார்.
 
அதேப்போல் திருவாரூர் எஸ்.பியிடம், "என் மீது புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கும்படியும் கூறியதோடு, மான நஷ்ட வழக்கும் போடுவேன்" என்று கூறிய பேட்டியை வாசித்தேன்.
 
இஸ்லாமியர் / திராவிடர் / தலித் அமைப்புகள் மீது பொய் குற்றச்சாட்டை கட்டவிழ்த்து தன் "இந்துத்துவ அமைப்பினரையும் தான் சார்ந்து இயங்கும் பா.ஜ.கட்சியினரையும் சுவாதி படுகொலை குற்றத்தில் இருந்து தப்ப வைத்து விடலாம்" என்று கணக்கு போடும் கருப்பு முருகானந்தத்தின் கோமாளித்தனத்தை புறக்கணித்து விடலாம். ஆனால் 'மான நஷ்ட வழக்கு போடுவேன்' என்ற வார்த்தையைத்தான் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.
 
ஒரு பொறுக்கிக்கு உரிய அத்தனை அயோக்கியத்தனத்தையும் வைத்திருக்கும் 'கருப்பு' அதுதான் 'மனித மாண்புக்குரிய பண்பு' என்று நினைத்துக் கொண்டதால் அந்த குணத்திற்குள் மானமும் இருப்பதாக நினைத்துக் கொண்டார் போலும்.
 
சுவாதி படுகொலைக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் எந்தளவுக்கு தொடர்பு இருக்கிறதோ அந்தளவுக்கு கருப்புவின் பா.ஜ.கட்சியைச் சேர்ந்த சிலருக்கும், இந்துத்துவ பரிவாள அமைப்பினரில் சிலருக்கும் தொடர்பு இருப்பதை மறைப்பதற்காகவே ஆரம்பத்தில் இருந்து 'இஸ்லாம் எதிர்ப்பு அரசியலை கையிலெடுத்தது பா.ஜ.கவினரும், இந்துத்துவ ஆதரவாளர்களும் தான்.
 
அதுவும் தமிழ்நாட்டிலுள்ள பா.ஜ.க பிரமுகர்கள் இந்த அவதூறுகளை வெளிப்படுத்துவதில் தீவிரமாக இயங்கினர். இதை சுவாதி படுகொலைக்கு பின் நடைபெறும் நிகழ்வுகளை கூர்ந்து கவனிக்கும் எவரும் அவதானிக்க முடியும்.
 
ஆனால் கருப்பு வழக்கம் போல் பழியை இஸ்லாமிய / திராவிட /தலித் அமைப்பினர் மீது தூக்கிப் போடுகிறார். இப்படி அறிவிப்பதற்கான நடைமுறை காரணங்களில் ஒன்றையாவது கருப்பு முருகானந்தத்தால் சுட்டிக்காட்ட முடியுமா?
 
"இந்துத்துவ அமைப்புகளும், பா.ஜ.க வினரும் தான் சுவாதி படுகொலையின் மூலம் இந்திய இறையாண்மைக்கு எதிராக மதக் கலவரத்தை தூண்டவும், சிறுபாண்மையினருக்கு எதிராக வன்முறையை உருவாக்கவும் திட்டமிட்டனர்" என்பதை வெளிப்படுத்த என்னிடம் பல நடைமுறை சம்பவங்கள் ஆதாரங்களாக உள்ளன.
 
நான் சுவாதி படுகொலை வழக்கில் பா.ஜ.க வினருக்கு பெரும் பங்கு இருப்பதை பட்டியல் இடுகிறேன். சூடு, சொரணை, ரோசம், மானம் இத்துடன் அறிவும் இருந்தால் ஓடி ஒளியாமல் 'மானஸ்தன் கருப்பு முருகானந்தம்' இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
 
முதல் கேள்வி :
 
"ஜீன் 24இல் சுவாதி படுகொலை செய்யப்பட்ட மறுநாளே பா.ஜ.க வைச் சேர்ந்த 'வினோத் இந்து நேஷனலிஸ்ட்' என்பவர் சுவாதியை கொன்றது பிலால் என்னும் இஸ்லாமிய இளைஞன் என்ற தகவலை திட்டமிட்ட அரசியல் காரணங்களுக்காக இணையத்தின் பொது ஊடகங்கள் வாயிலாக பரவவிட்டார். இந்த பதிவை பகிர்வு செய்தவர்கள் பா.ஜ.க மற்றும் இந்து பரிவாள அமைப்புகள்.
 
இந்த அவதூறு பதிவு இணையத்தில் கடும் விமர்சனங்களை எதிர் கொண்ட போது சில தினங்களில் அவதூறு பதிவு நீக்கப்பட்டு அப்பக்கத்தின் பெயரும் 'சுப்பையன்.கே' என்று மாற்றப்பட்டது.
 
இவ்வாறு சுவாதியை கொன்றது 'பிலால் என்னும் இஸ்லாமிய இளைஞன்' என்ற அவதூறு செய்தியை பரப்ப காரணமான 'வினோத் இந்து நேஷனலிஸ்ட்' குறித்த அனைத்து ஆதாரங்களும் சேமிக்கப்பட்டுள்ளன. பா.ஜ.க வைச் சேர்ந்த ஒரு பிரதி இவ்வாறு செயல்பட வேண்டிய அவசியம் என்ன என்பதை கருப்பு முருகானந்தம் விளக்கம் அளிப்பாரா?
 
இரண்டாவது கேள்வி :
 
ராம்கி பா.ஜ.கவைச் சேர்ந்த இவரை டிவீட்டரில் மோடி Fallow யராக இருக்கின்றார். சுவாதியை கொன்றது பிலால் என்னும் இஸ்லாமியன் என்று டீவிட்டரில் எழுதினார். அதுவும் சுவாதி கொல்லப்பட்ட இரண்டு தினங்களுக்குள். பிலால் குறித்து எந்த தகவலும் எந்த பத்திரிகையிலும் செய்தியாக வராத போது இந்த பா.ஜ.க பிரமுகருக்கு எப்படி அந்த பெயர் தெரிந்திருந்தது என்பதை கருப்பு முருகானந்தம் விளக்குவாரா?
 
மூன்றாவது கேள்வி :
 
பா.ஜ.கவைச் சேர்ந்த ஓய்.ஜி.மகேந்திரன், 'வினோத் இந்து நேஷனலிஸ்ட்' எழுதிய அவதூறு தகவலை காப்பி பேஸ்ட் செய்து தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட போது தான் இணையதளங்களில் எதிர்ப்பு தீவிரம் அடைந்தது. சுதாகரித்துக் கொண்ட ஓய்.ஜி.மகேந்திரன், "நான் எழுதவில்லை. நான் ஷேர் தான் செய்தேன்" என்றார். ஷேர் செய்வதற்கும் காப்பி பேஸ்ட் செய்வதற்கும் உள்ள வித்தியாசங்களையும் சுட்டிக்காட்டி கண்டனங்கள் குவியவே மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இதற்கு கருப்பு முருகானந்தம் என்ன சமாதானத்தை கூறப் போகிறார்?
 
நான்காவது கேள்வி :
 
பா.ஜ.க வைச் சேர்ந்த எஸ்.வி.சேகர், 'பிலால் மாலீக் தான் சுவாதியை கொன்றது' என்றார். மேலும் ஓய்.ஜி.மகேந்திரனுக்கு ஆதரவாகவும் பேசிய வார்த்தைகள் மத துவேஷத்தை தூண்டின. இதன் தொடர்ச்சியாக இந்து /இஸ்லாம் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் கருத்துக்களையும் வெளியிட்ட வீடியோ ஆதாரம் இருக்கிறது. இதை கருப்பு முருகானந்தம் ஆதரிக்கிறாரா?
 
ஐந்தாவது கேள்வி :
 
ஓய்.ஜி.மகேந்திரனுக்கு வக்கலாத்து வாங்கிய எஸ்.வி.சேகரைப் போல் இன்னொரு பா.ஜ.க பிரமுகரான எச்.ராஜாவும் தன் பங்கிற்கு பேஸ்புக்கில் சுவாதியைக் கொன்றது 'பிலால் மாலீக்' என்றார். மதவிரோத கருத்துக்களை வெளியிட்டார். அதற்கான அத்தனை ஆதாரங்களும் இணையவெளியில் கிடக்கின்றன. பண்பற்ற எச்.ராஜாவின் செயற்பாட்டை கருப்பு முருகானந்தம் என்ன வார்த்தைகளால் நியாயப்படுத்த முற்படுவார்?
 
ஆறாவது கேள்வி:
 
பா.ஜ.கவைச் சேர்ந்த மற்றொரு 'பிராபலம்' கல்யாணராமன். "சனி சீவி சிங்காரித்து, பொட்டிட்டு, குத்தாட்டம் போட ஆரம்பித்தால்.... என்ன நடக்கும் என்று அந்த சனியனுக்கே தெரியாது" என்பது போல் கல்யாணராமனின் நடத்தையை அரசியல் விமர்சகர்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.
 
சுவாதி படுகொலைக்காக இந்த கல்யாணராமனின் ஆட்டத்தை கருப்பு முருகானந்தம் எப்படி விளக்கினாலும் அது அயோக்கியத்தனமாகவே இருக்கும்.
 
ஏழாவது கேள்வி :
 
இனி பிலால் தான் குற்றவாளி என்று பேசிக் கொண்டிருந்தால் தாங்கள் அம்பலப்பட்டு விடுவோம் என்று பயந்த பாஜகவினரும் இந்துத்துவ அமைப்புகளும் மாற்று திட்டத்தை ஆரம்பித்தனர். அதில் பலியாக்கப்பட்டவர்தான் ராம்குமார். அதிலும் பலவிதமான குழப்பங்கள் ஏற்பட தங்கள் மீது பொது மக்களுக்கு சந்தேகம் வந்துவிடக் கூடாது என்பதற்காக பாஜக வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி அனுப்பப்படுகிறார்.
 
ராம்குமாரின் பெற்றோரை சந்தித்து தான் ஆஜராகப் போகும் எந்தத் தகவலையும் அவர்களிடம் அறிவிக்காமல் நுழைந்த போது பாஜகவினரின் அரசியல் நடவடிக்கைகள் குறித்து நன்கறிந்த சமூக ஆர்வலர்களிடையே சந்தேகத்தை வலுக்கச் செய்து பலவித கேள்விகளை எழுப்பினர்.
 
அப்போது தன்னை சந்தேகித்துவிடக் கூடாது என்பதற்காக ராம்குமாரின் கழுத்தை அறுத்தது போலிஸ்தான் என்றெல்லாம் அறிக்கை விட்டார். ஒரு கட்டத்தில் தன்னை சுவாதி ஆவி மிரட்டுவதாக கூறி வழக்கில் இருந்து வெளியேறினார். இவருடைய கருத்து எதிராக ராம்குமார் தான் குற்றவாளி. அவன் தான் கழுத்தை அறுத்துக் கொண்டான் என்று ஒரு பெண் வழக்கறிஞர் ஆஜரானார். அவர் வேறு யாருமில்லை. கிருஷ்ணமூர்த்தியின் மனைவிதான்.
 
இத்தனை பிரபல பா.ஜ.க வினர் கூறிய குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் வருவதற்கு திட்டமிட்டு பரப்பப்பட்ட வதந்தி. இத்தனைக்கும் பா.ஜ.க அரசியல் பிரமுகர்கள் குறிப்பிட்ட அந்த இஸ்லாமிய இளைஞன் சுவாதி படுகொலை செய்யப்பட்ட அன்றைய தினத்தில் சுவாதியின் பிணத்தின் அருகே கத்திக் கதறி அழுது கொண்டிருந்தார். சுவாதியின் சித்தப்பாவோ சுவாதியின் பிணத்தை பல கோணங்களில் செல்போனில் படம் பிடித்துக் கொண்டிருந்தார். சுவாதியின் அப்பா எந்த பதற்றமும் இல்லாமல் இருந்தார் என்பதோடு இன்று வரை தன் மகளை கொன்றவன் யார் என்று விசாரணை நடத்த வேண்டும் என்று புகார் கொடுக்கவே இல்லை. ஏன்?
 
சுவாதியின் பிணத்தின் அருகே கதறி அழுது கொண்டிருந்த பிலாலுக்கும் சுவாதிக்கும் என்ன தொடர்பு என்பது முன்கூட்டியே பா.ஜ.க பிரமுகர்களுக்கு எப்படி தெரிந்திருந்தது? சுவாதி இஸ்லாமிய இளைஞனை காதலித்து திருமணமும் செய்து கொண்டு மதமாற்றத்திற்கு தயாராகிறார் என்ற தகவல் சுவாதியின் சித்தப்பா கோவிந்த ராஜன் தான் சார்ந்துள்ள விஷ்வ இந்து பர்ஷித் உதவியோடு சில திட்டங்களை முன்னெடுத்துள்ளார். இதற்கு சுவாதியின் அப்பாவும் உடந்தை. செயல்படுத்துவதற்கு கருப்பு முருகானந்தம். இந்த பாதகத்தை செய்வதற்கு கூலிப்படையை அனுப்பியவர் தென்காசி தங்கதுரை. கொலையை செய்தவர்கள் இஸ்மாயில், முத்துக்குமார், வீராசாமி.
 
இத்தனை கேள்விகளையும் மறுத்து மானஸ்தன் கருப்பு முருகானந்தம் அறிக்கை விடாவிட்டால் புகார் பிரதி மனு ப்ரெஞ்ச் காவல்துறை என்னிடம் கொடுக்கும் போது International court செல்வேன். மானநஷ்ட வழக்கு போட்டிருக்கும் மானஸ்தன் கருப்பு மீது இந்தியாவில் எத்தனை வழக்குகள் உள்ளன? எத்தனை வழக்குகள் விசாரணையில் இருக்கின்றன? என்பதை அம்பலப்படுத்துவேன். இதற்கு தயார் என்றால் புகார் பிரதி எனக்கு கூடிய விரைவில் கிடைக்க கருப்பு முருகானந்தம் முயல வேண்டும்.
 
'தில்' இருக்கிறதா காவி படை தளபதி கருப்பு?
 
என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 
 
சுவாதியின் கொலை வழக்கு குறித்து இவர் தெரிவித்து வரும் கருத்துகள பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல நடிகருக்காக உயிரை விட்ட ரசிகர்!