Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாங்கிய பணத்தை ராம்ராஜ் திருப்பி கொடுக்கவேண்டும் : தமிழச்சி ஆவேசம்

வாங்கிய பணத்தை ராம்ராஜ் திருப்பி கொடுக்கவேண்டும் : தமிழச்சி ஆவேசம்

வாங்கிய பணத்தை ராம்ராஜ் திருப்பி கொடுக்கவேண்டும் : தமிழச்சி ஆவேசம்
, சனி, 10 செப்டம்பர் 2016 (14:13 IST)
சுவாதி வழக்கிலிருந்து ராம்குமாரின் வழக்கறிஞர் ராம்ராஜ் விலக முடிவெடுத்தால், அவர் இதுவரை வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று தமிழச்சி கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
திடீர் திருப்பமாக, சுவாதி வழக்கில், ராம்குமாரின் சார்பில் ஆஜராக வந்த வழக்கறிஞர் ராம்ராஜ், இந்த வழக்கிலிருந்து விலக முடிவெடுத்துள்ளதாக செய்திகள் உலா வருகிறது.
 
இந்நிலையில், சுவாதி வழக்கில் பல்வேறு பரபரப்பு தகவல்களை அவ்வப்போது வெளியிட்டு வரும் தமிழச்சி என்பவர் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
 
சுவாதி படுகொலை விசாரணையில் பொய் குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காட்டப்பட்டுள்ள ராம்குமார் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ராம்ராஜ் திடீரென தான் வழக்கில் இருந்து விலகிக் கொள்ளப் போவதாக ராம்குமார் பெற்றோரிடம் நேற்று அறிவித்து உள்ளார்.
 
அதற்கான காரணம் என்ன என்று அவருடைய பெற்றோர்கள் கேட்டதற்கு எந்த பதிலும் அளிக்காததோடு அதற்கு பிறகும் பலமுறை தொடர்பு கொண்டும் பதிலளிக்க மறுத்துள்ளார்.
 
'ராம்குமார் தான் குற்றவாளி' என்று தமிழக காவல்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்த போது தோழர் திலீபன் மகேந்திரன் தனக்கு தெரிந்த நண்பர்களிடம் 12000 ரூபாய் (சரியான எண்ணிக்கை நினைவில்லை) சேகரித்து ராம்குமாருக்காக ஆஜராகும்படி கேட்டுக் கொண்டார்.
 
[ராம்குமார் பெற்றோர்கள் நிலை தடுமாறி சட்டப்படி என்னென்ன செய்ய வேண்டும் என்பதை கூட அறியாத கிராமத்து மனிதர்கள். அவர்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தி அவர்களுக்கும் உதவியவர்தான் தோழர் திலீபன் மகேந்திரன்]
 
இதற்கிடையே ஒரு குறிப்பிட்ட சாதி சங்கமும் ராம்குமாரை விடுவிக்க வழக்கறிஞர் ராம்ராஜிடம் 50.000 ரூபாய் தருவதாக கூறி முன்பணமாக 16.000 ரூபாய் கொடுத்துள்ளது.
 
ராம்குமார் பெற்றோரும் 20.000 ரூபாய் கொடுத்துள்ளார்கள். தோழர் திலீப்பனும் அவ்வப்போது குறிப்பிட்ட தொகையை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கறிஞர் ராம்ராஜ் எதற்காக வழக்கில் ஆஜராக மறுக்கிறார் என்று கூறவேண்டும்.
 
ராம்குமார் வழக்கிற்காக மற்றவர்களிடம் எவ்வளவு தொகை பெற்றாரோ அதை திருப்பி கொடுக்க வேண்டும். மறுத்தால், "இதுவும் ஒருவகை மோசடி" என்பதை உணர வைக்க வேண்டிய நிலைக்கு நம்மை உள்ளாக்க மாட்டார் என்று நம்புகிறோம்.
 
இதற்கு மேல் வழக்கில் ஆஜராக விருப்பமில்லை என்றால் வாங்கிய தொகையை கொடுக்க வேண்டும்.
 
"தான் நேர்மையான வழக்கறிஞர் என்று தன்னை தானே பாராட்டிக் கொள்ளும் அந்த குணத்திற்காகவாவது வழக்கறிஞர் ராம்ராஜ் இதுவரை ராம்குமார் வழக்கிற்காக பெற்றுக் கொண்ட தொகையை திருப்பி கொடுத்து 'தான் நேர்மையாளன் தான்' என்று நிரூபிப்பார் என நம்புகிறோம்.
 
என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுவாதி கொலை : ராம்குமாரின் வழக்கறிஞர் ராம்ராஜ் திடீர் விலகல்?