Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சுவாதியை கொலை செய்த மணி வெட்டி படுகொலை?: தமிழச்சி அதிர்ச்சி தகவல்!

சுவாதியை கொலை செய்த மணி வெட்டி படுகொலை?: தமிழச்சி அதிர்ச்சி தகவல்!

சுவாதியை கொலை செய்த மணி வெட்டி படுகொலை?: தமிழச்சி அதிர்ச்சி தகவல்!
, வெள்ளி, 23 செப்டம்பர் 2016 (11:26 IST)
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதியை கொலை செய்தது ராம்குமார் இல்லை என கூறிவந்த தமிழச்சி, அந்த கொலையாளிகளில் மணி என்பவரின் பெயர் மற்றும் முகவரியை வெளியிட்டார்.


 
 
ராம்குமார் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்ட அன்று மணி குறித்த தகவலை அவர் வெளியிட்டார். இந்நிலையில் அவரும் வெட்டி படுகொலை செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
 
இது குறித்தான தமிழச்சியின் பதிவு, சுவாதி படுகொலை வழக்கு விசாரணையில் இருந்த ராம்குமார் காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட அன்று சுவாதியை கொன்றவர்களில் ஒருவரான 'மணி' என்பவர் குறித்த தகவல்கள் எழுதி இருந்தேன். அவர் கூடிய விரைவில் கொல்லப்படுவார் என்றும் குறிப்பிட்டிருந்தேன்.
அதேப்போல் இன்று காலை அவர் கொல்லப்பட்டிருக்கிறார்.
 
உடல் அடையாளம் தெரியவில்லை என்கிறார்கள். ஆனால் தலை மொட்டையாக இருந்தால் நிச்சயம் மணி தான்.
இத்தகவல் நான் எழுதிய உடன் ஒரு பத்திரிக்கையார் அச்செய்தி உண்மைதானா என்று புலன் விசாரணை செய்து ஒரு பதிவு வெளியிட்டிருந்தார்.
 
தன் மகனை குறித்து அவதூறு பதிவு போட்டதற்காக தமிழச்சி மீது போலிசில் புகார் அளிக்கப் போகிறேன் என்று பேட்டி கொடுத்திருந்தார். ஆனால் இன்று மணி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
 
2-வதாக கொல்ல முயற்சிக்க கூடியவர்களில் ராம்குமார் குடும்பத்தில் உள்ள ராம்குமார் அப்பா அம்மா இரு தங்கைகளில் யாராவது ஒருவர் பலியாக்கப்படலாம். எனவே அவர்கள் சொந்த ஊருக்கு திரும்பிச் செல்லக் கூடாது. ராம்குமார் குடும்பத்தினருக்கு போலிஸ் பாதுகாப்பு வேண்டும் என்று கேட்பது சொந்த செலவில் நாமே சூனியம் வைத்துக் கொள்வது போன்றது. எனவே இயக்கங்கள் ராம்குமார் குடும்பத்திரை பாதுகாக்க பொறுப்பு ஏற்க வேண்டும். திலீபன் போன்ற ஒரு இளைஞன் தான் அந்த குடும்பத்தினரை தற்போது பாதுகாக்க முடியும். ஆனால் திலீபன் உயிருக்கும் ஆபத்து. அது உடனடியாக நடக்காது. சில மாதங்கள் ஆகலாம்.
 
சுவாதி படுகொலை விவாதங்கள் திசைமாற வேண்டும் என்பதற்காகத்தான் தொடர்ச்சியான படுகொலைகள். இதை செய்வது ஆர்.எஸ்.எஸ் காவிக் கூலிப்படைகள்.
சுவாதி படுகொலை விவாதம் இப்போது ராம்குமார் படுகொலை விவாதமாக மாற்றப்பட்டுள்ளது. ராம்குமார் படுகொலையில் மர்மம் இருப்பதால் இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிணஆய்வு நடைப்பெறக் கூடாது என்று போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.
 
இன்னமும் ராம்குமாரின் பெற்றோர் தன் மகனின் உடலைக்கூட பார்க்க முடியாத ஜனநாயக நாட்டிலா நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்?" என்று பொது விமர்சனத்தை திசை மாற்ற மணி படுகொலை உதவக்கூடும்.
நம் நோக்கம் இதுவல்ல; சுவாதியை கொன்றது யார்? ராம்குமாரை கொன்றது யார்? மணியை கொன்றது யார்? இனி யார் யாரை கொல்லப் போகிறார்கள்? இதற்கு அடிப்படியான அரசியல் என்ன? என்ற கேள்வி ஒவ்வொரு மக்களுக்கும் வரவேண்டும்.
 
திலீப்பனைப் போல் ரோசியைப் போல் நீங்கள் இல்லாவிட்டாலும் ராம்குமார் குடும்பத்தினரைக் காப்பாற்ற சகமனிதனுக்காக உங்கள் கண்டனக் குரல்களையாவது வெளிப்படுத்துங்கள். இவ்வாறு தமிழச்சி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’சினம் கொண்ட இந்தியா’ - 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!