அதிமுக சீட் கொடுக்க தயாராக இருந்தது, நான் தான் வேண்டாம் என சொல்லிவிட்டேன்: தமிமுன் அன்சாரி..!

Mahendran
சனி, 23 மார்ச் 2024 (08:14 IST)
அதிமுக எங்களுக்கு ஒரு சீட் தர தயாராக இருந்தது என்றும் நான் தான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன் என்றும் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக பிரிந்து வந்த பிறகு முதல் முறையாக ஆதரவு கொடுத்த கட்சி மனிதநேய ஜனநாயக கட்சி என்பதும் தமிமுன் அன்சாரி, எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் மனிதநேய ஜனநாயக கட்சி இடம்பெறும் என்று எதிர்பார்த்த நிலையில் திடீரென சமீபத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து தனது ஆதரவை தமிமுன் அன்சாரி வழங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த தமிமுன் அன்சாரி அதிமுக எங்களுக்கு ஒரு சீட் தர தயாராக இருந்தது என்றும் ஆனால் நான் தான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன் என்றும் தற்போது நாங்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து கொள்கிறோம் என்றும் கூறியுள்ளார்.

பாஜகவில் இருந்து பிரிந்து வந்ததற்காக அவர்களுக்கு வாழ்த்து சொல்ல தான் சென்று இருந்தேன் என்றும் அதிமுக கூட்டணியில் நாங்கள் இணைவோம் என்று எப்போதும் செல்லவில்லை என்றும் ஊடகங்கள் தான் அவ்வாறு சொல்லி வந்தது என்றும் தெரிவித்தார்
மேலும் திமுக அதிமுக ஆகிய இரண்டு பெரிய கட்சிகளுமே சிறுபான்மையின மக்களை புறக்கணிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக இரு கட்சிகளையும் நாங்கள் அரவணைத்து செல்கின்றோம் என்றும் அவர் கூறினார்.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் நெரிசல் பலி: சிபிஐ முதற்கட்ட அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்

நேற்று திடீரென மூடப்பட்ட சென்னை அமெரிக்க தூதரகம்.. என்ன காரணம்?

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா பதவி பறிக்கப்படுகிறதா? நிர்வாகிகளை கூண்டோடு மாற்றும் விஜய்?

வறுமையை ஒழித்த கேரளா! இனியாவது உணருமா தமிழகம்? - அன்புமணி வேதனை!

தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு வந்த புது மணப்பெண் தற்கொலை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments