Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Friday, 4 April 2025
webdunia

அடுத்த 3 நாட்களுக்கு மழை – சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை !

Advertiesment
மழை
, ஞாயிறு, 6 அக்டோபர் 2019 (18:44 IST)
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு ஆங்காங்கே மழைப் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தை விட 30 சதவீதம் அதிகமாக மழைப்பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த வாரத்தோடு தென்மேற்குப் பருவமழை முடிந்த நிலையில் தமிழகத்தில் ஆங்காங்கே சில இடங்களில் மழைப் பெய்து வருகிறது.

சேலம், தேனி, போடி நாயக்கனூர் ஆகிய பகுதிகளில் மழைப் பெய்துள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் அந்த மழை அக்டோபர் 9 ஆம் தேதி வரை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’குட்டி யானை’யை காப்பாற்ற முயன்ற 5 யானைகள் பலி' ! சோகமான சம்பவம் !