Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையால் 40 செமீ மழையை எல்லாம் தாங்க முடியாது… 15 செமீ-தான் லிமிட் – பிரதீப் ஜான் எச்சரிக்கை!

vinoth
செவ்வாய், 15 அக்டோபர் 2024 (15:34 IST)
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ள நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று இரவு முதலே பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது இதுவரை 20 செமீ வரை மழை பெய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இன்று இரவு முதல் நாளை காலை வரை அதிகனமழை பெய்யும் எனவும் அது 20 செமீ வரை இருக்கும் எனவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதுவரை பெய்த மழைக்கே சாலைகளில் நீர் தேங்கியுள்ளது. மழைநீர் வடிகால் பணிகள் செய்யப்பட்டும் அதனால் பெரிய பலன் எதுவும் இல்லை என்று மக்கள் கடும் அதிருப்தியை வெளிக்காட்ட தொடங்கியுள்ளனர்.

இதுபற்றி பேசியுள்ள ப்ரதீப் ஜான் “ சென்னையில் பெய்யும் மழை எல்லாம் எண்னூர், நேப்பியர், அடையாறு மற்றும் ஒக்கியம் ஆகிய நான்கு வழிகளில்தான் வெளியேறுகிறது. சென்னையால் 15 செமீ வரைதான் மழையைத் தாங்க முடியும். 20 செமீ மழை பெய்தால் ஒரு நாள் நீர் தேங்கும்.  40 செமீ மழை பெய்தால் கண்டிப்பாக நான்கு நாட்கள் நீர் தேங்கும்.  மழைநீர் வடிகால் என்பது சாலைகளுக்காக போடப்படுவது. 40 செமீ மழைக்கு எல்லாம் வடிகால் போட முடியாது. அதனால் நாம்தான் சூழலைப் புரிந்துகொண்டு எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ” என எச்சரிக்கும் விதமாகப் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்னும் சில நிமிடங்களில் நாடாளுமன்ற கூட்டம்: பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் பிரதமர் மோடி!

கூகிள் மேப்பை நம்பி இடித்த பாலத்தில் பயணம்! ஒட்டு மொத்தமாக பலியான பயணிகள்! - உத்தர பிரதேசத்தில் சோகம்!

வாரத்தின் முதல் நாளே அமோகம்.. 1100 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்த சென்செக்ஸ்..!

இன்று ஒரே நாளில் 800 ரூபாய் குறைந்த தங்கம் விலை.. இன்னும் குறையுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments