Publish Date: Thu, 21 Apr 2022 (08:30 IST)
Updated Date: Thu, 21 Apr 2022 (08:32 IST)
முதல் மனைவி உயிரோடு இருக்கும்போது தமிழக அரசு ஊழியர்கள் இரண்டாவது திருமணம் செய்யக் கூடாது என தமிழக அரசு எச்சரித்துள்ளது.
முதல் மனைவி உயிரோடு இருக்கும்போது இரண்டாவது திருமணம் செய்வது என்பதை தமிழ்நாடு அரசு ஒழுக்கக் கேடான காரியமாக கருதுகிறது. 1973 தமிழ்நாடு அரசு பணியாளர் சட்ட விதிகளின்படி, பணியில் உள்ள அரசு ஊழியர்கள் முதல் மனைவி உயிரோடு இருக்கும்போது இரண்டாவது திருமணம் செய்யக்கூடாது என தெரிவித்துள்ளது.
அவ்வாறாக இரண்டாவது திருமணம் செய்வதால் முதல் மனைவிக்கு கிடைக்க வேண்டிய பலன்கள் கிடைப்பதில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அவ்வாறாக இரண்டாவது திருமணம் செய்யும் நபர்கள் மீது துறை ரிதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.