காத்திருக்குது கனமழை; எந்தெந்த மாவட்டங்களில்? – வானிலை ஆய்வு மையம்!

Webdunia
புதன், 19 அக்டோபர் 2022 (08:42 IST)
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வரும் நிலையில் இன்றும் மழை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று முதல் 22ம் தேதி வரை 4 நாட்களுக்கு பல மாவட்டங்களில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ALSO READ: மீண்டும் பெங்களூரு வெள்ளத்தில் மூழ்குமா? மஞ்சள் அலர்ட் விடுத்ததால் பரபரப்பு!

அதன்படி இன்று, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல், தேனி, கோவை, திருப்பூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கடலூர், கரூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட 23 மாவட்டங்களில் சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

புதுச்சேரியிலும் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Edited By: Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலர் பயிற்சி: திருச்சூரில் மைதானத்தில் இளம் பெண் உயிரிழப்பு

ரீல்ஸ் மோகத்தால் யமுனை ஆற்றில் தவறி விழுந்த பாஜக எம்எல்ஏ!

பீகார் தேர்தல்: மாதம் ரூ.2500 மகளிர் உதவித்தொகை.. வாக்குறுதிகளை அள்ளி வீசிய இந்தியா கூட்டணி..!

முதல்வர் ஸ்டாலின் தென்காசி வரும்போது எதிர்ப்பு தெரிவிப்போம்: மேலகரம் பெண்கள் ஆவேசம்..!

'SIR' வாக்காளர் திருத்த பணிக்கு கேரள முதல்வர் கடும் எதிர்ப்பு! பாஜகவின் சதி என குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments