Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐநா சபையில் நீட் தேர்வு பற்றி பேசிய தமிழக மாணவி – குவியும் பாராட்டுகள் !

Advertiesment
ஐநா சபையில் நீட் தேர்வு பற்றி பேசிய தமிழக மாணவி – குவியும் பாராட்டுகள் !
, ஞாயிறு, 6 அக்டோபர் 2019 (07:30 IST)
ஐநா சபையில் உரையாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த மாணவி பிரேமலதாவுக்கு பாரட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன.

மதுரை மாவட்டம் இளமனூர் அருகே கார்சேரியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி தமிழ்செல்வத்தின் மகள் பிரேமலதா. இளங்கலை பட்டதாரியான இவர் மனித உரிமை கல்வியையும் கற்றுள்ளார்.  A Path to Dignity: The Power of Human Rights Education என்ற ஆவணப்படத்தில் இவர் மனித உரிமைகள் குறித்துப் பேசியுள்ளார். இதையடுத்து அவருக்கு ஐநா சபையின் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் பேச அழைப்பு விடுக்கப்பட்டது.

இதையடுத்து அக்டோபர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் அவர் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் இடம்பெற்ற ஆவணப்படம் ஒளிபரப்பப் பட்டது. அமர்வில் பேசிய அவர் இந்தியாவில் நீட் தேர்வால் பல மாணவிகள் தற்கொலை செய்துகொண்டதைப் பற்றி பேசியுள்ளார். இதையடுத்து நாடு திரும்பிய அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரேமலதா பேச்சுக்கு கல்வியாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொலை செய்து சடலத்துடன் உறவு – குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை !