Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Wednesday, 16 April 2025
webdunia

தமிழக அரசு அவதூறு வழக்கு - சிறப்பு நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் ஆஜர்

Advertiesment
MK Stalin DMK Party Leader ADMK Jeyalalitha
, புதன், 24 அக்டோபர் 2018 (11:01 IST)
தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில் எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இன்று ஆஜர்.
சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏக்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் தி.மு.க தலைவரும், தமிழக எதிர்கட்சி தலைவருமான ஸ்டாலின் இன்று ஆஜரானார். அவர் முதல்முறையாக இந்த நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார். எனவே நீதிமன்றத்தில் தி.மு.க தொண்டர்கள் கூடியிருந்தனர். இதனால் அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

2011ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்குகள் மீதான விசாரணையில் ஸ்டாலின் தற்போது ஆஜராகி உள்ளார். அவருடன் தி.மு.கவின்  முக்கிய நிர்வாகிகள் நீதிமன்றத்திற்கு வந்துள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

31 மலைகளை காணவில்லை!!! அதிர்ச்சியடைந்த உச்சநீதிமன்றம்