Publish Date: Sun, 08 Aug 2021 (12:13 IST)
Updated Date: Sun, 08 Aug 2021 (12:15 IST)
தமிழகத்தில் தென்மேற்கு பபருவக்காற்று காரணமாக கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்றும் நாளையும் நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் டெல்டா பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் எனவும், ஆகஸ்டு 12 வரை தமிழகத்தில் மழை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.