சென்னை உட்பட 5 மாவட்டங்களில் கனமழை! – வானிலை ஆய்வு மையம்!

Webdunia
செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (09:17 IST)
தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதிகமான மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மைய தகவலின் படி இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் காற்று வேகமாக வீசக்கூடும் என்பதால் 27ம் தேதி வரை மீனவர்கள் அப்பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீகார் தேர்தல் முடிவுகள்.. ஆரம்பகட்ட நிலவரத்தில் பாஜக கூட்டணி முன்னணி..!

ஸ்ரேயா கோஷலின் இசை நிகழ்ச்சியில் கட்டுக்கடங்காத கூட்டம்.. இருவர் மயக்கம்..!

வாக்கு எண்ணும் முன்பே வெற்றி கொண்டாட்டம்.. 500 கிலோ லட்டு ஆர்டர் செய்த NDA

டெல்லி குண்டுவெடிப்பு குற்றவாளி உமர் முகமது வீடு இடித்து தரைமட்டம்.. பாதுகாப்பு படை அதிரடி..!

தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தரையிறங்கிய விமானம்.. புதுக்கோட்டையில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments