தமிழகம் முழுவதும் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் நிலையில் மக்கள் பலர் ஆர்வமாக தடுப்பூசி செலுத்த முன் வந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் தடுப்பூசி விரைவாக எடுத்துக் கொள்ள கடந்த 12ம் தேதி தமிழகம் முழுவதும் பிரம்மாண்ட தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதில் சுமார் 23 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் அதை தொடர்ந்து இன்று மீண்டும் தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. இந்த முறை 30 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 7 மண் வரை நடைபெறும் இந்த முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள பலரும் ஆர்வமாக வருகை தருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.