நாளை முதல் தமிழகத்தில் அதீத கனமழை! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Webdunia
ஞாயிறு, 22 நவம்பர் 2020 (08:51 IST)
வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ள நிலையில் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தற்போது தெற்கு வங்க கடலின் மைய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும், 25ம் தேதி வாக்கில் தெற்கு தமிழகம் நோக்கி நகரும் என்றும்  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்த 48 மணி நேரத்திற்கு நாகப்பட்டிணம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செத்து போனவங்கள வச்சி ஓட்டு வாங்கும் திமுக!.. எடப்பாடி பழனிச்சாமி விளாசல்!..

வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments