Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜல்லிக்கட்டு போராட்டம் ; பிற மாநிலங்களில் தலையெடுக்கும் கலாச்சார விளையாட்டுகள்

Webdunia
வியாழன், 26 ஜனவரி 2017 (16:29 IST)
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு வேண்டி இளைஞர்கள் நடத்திய போராட்டம் காரணமாக, இந்தியாவின் மற்ற மாநிலங்களில் தடைவிதிக்கப்பட்டிருந்த விளையாட்டுகளும் நடத்தப்பட வேண்டும் என்ற குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.


 

 
ஜல்லிக்கட்டிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கப்பட வேண்டும் என சென்னை, மதுரை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இளைஞர்கள், கடந்த 15ம் தேதி போராட்டத்தை தொடங்கினர். அவர்களோடு பொதுமக்களும் கைகோர்த்தனர். இதனால், தமிழக அரசு வேறு வழியில்லாமல் அவசர சட்டத்தை கொண்டு வந்தது. தற்போது ஜல்லிக்கட்டிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கப்பட்டுள்ளது.
 
இதைக்கண்ட மற்ற மாநிலங்களும் தற்போது நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டுள்ள தங்கள் பாரம்பரிய விளையாட்டுகளை நடத்த வேண்டும் என போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர்.


 

 
கர்நாடகாவில் பல வருடங்களாக ‘கம்பாளா’ போட்டி நடைபெற்று வந்தது. எருதுகளை வைத்து நடத்தப்படும் இந்த போட்டிக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், தமிழக அரசு போல், நாங்களும் கம்பளா போட்டியை நடத்தை அவசர சட்டம் கொண்டு வருவோம் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 
 
அதேபோல், அசாமில் தடைவிதிக்கப்பட்டுள்ள எருது சண்டை போட்டியை, தடையை மீறி நாளை நடத்துவோம் என சில அமைப்புகள் அறிவித்துள்ளது. 


 

 
இதேபோல் மற்ற மாநிலங்களிலும் தடை விதிக்கப்பட்டுள்ள, கலாச்சார போட்டிகள் தடையை மீறி நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கெல்லாம் தமிழகத்தில் நடந்த போராட்டமே எடுத்துக்காட்டாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆளுநர் வெளியேற்றத்திற்கு இதுதான் காரணமா? ஓபிஎஸ் கூறிய வித்தியாசமான தகவல்..!

இன்று ஒரே நாளில் 1,258 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

ஜாமீன் பத்திரத்தில் கையெழுத்திட மறுப்பு.. சிறையில் அடைக்கப்பட்ட பிரசாந்த் கிஷோர்..!

கர்நாடகா, குஜராத்தை அடுத்து சென்னையிலும் HMPV வைரஸ்.. 2 குழந்தைகளுக்கு பாதிப்பு..!

ஞானசேகரனின் சொத்து பட்டியல் வேண்டும்: பத்திர பதிவுத்துறைக்கு நோட்டீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments