Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம் வந்த 6 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பா? – அமைச்சர் விளக்கம்!

Webdunia
செவ்வாய், 14 டிசம்பர் 2021 (11:58 IST)
உலகம் முழுவதும் ஒமிக்ரான் பரவிவரும் நிலையில் தமிழகம் வந்த 6 பேருக்கு ஒமிக்ரானா என்பது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவிலிருந்து பரவ தொடங்கிய புதிய வகை கொரோனா வைரஸான ஒமிக்ரான் இதுவரை 60க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் இதுவரை இந்தியாவில் 30க்கும் மேற்பட்ட ஒமிக்ரான் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழகத்தில் விமான நிலையங்களில் ஒமிக்ரான் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நைஜீரியாவில் இருந்து தமிழகம் ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருக்கலாம் என்ற பீதி எழுந்துள்ள நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன் “சந்தேகத்தின் பேரில் நைஜீரியாவிலிருந்து வந்தவர் அவரது குடும்பத்தினர் 6 பேரின் மாதிரிகள் ஒமிக்ரான் சோதனைக்காக பெங்களூர் ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சோதானை முடிவுகள் கிடைத்ததும் அவர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பா என்பது தெரிய வரும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் பொங்கல் தினத்தில் மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

சரணடையும் நக்ஸலைட்டுகளுக்கு லட்சக்கணக்கில் சன்மானம்! - சாதித்து காட்டிய சத்தீஸ்கர்!

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments