Webdunia - Bharat's app for daily news and videos

Install App

14 இடங்களில் சதமடித்த வெயில்; மெல்ல குறைய வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்!

Webdunia
திங்கள், 5 ஏப்ரல் 2021 (11:57 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் மெல்ல குறைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மதுரை, காஞ்சிபுரத்தில் 107 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. திருச்சி, அரியலூரில் 106 டிகிரியும், சேலத்தில் 105 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. இதேபோல் தருமபுரி, கோவில்பட்டி, பெரியகுளம், திருத்தணி, நெய்வேலி உள்ளிட்ட பகுதிகளிலும் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி இருந்துள்ளது.

இந்நிலையில் தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் இருந்து காற்று வீச வாய்ப்புள்ளதால் தமிழகத்தில் பல பகுதிகளில் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments